ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ்

 ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders) பிறந்த நாளின்று.





💐
வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சிக் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, மனிதகுலத்துக்கு மகத்தான சேவை புரிந்தவர் இந்த ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders)
இவர் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புச்சக்தி மருந்தையும் கண்டறிந்தார்.
பின்னாளில் போலியோ வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக இவருக்கு 1954ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவரது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.
ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 88 வயதில் மறைந்தார்.
Prabhala Subash and 1 other

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,