தமிழே என் தாய்மொழித் தமிழே
- Get link
- Other Apps
உலகத்தின் முதல் மொழியே
உணர்வில் கலந்து விட்ட
உயிர்மொழி என் தாய்மொழியே
தமிழே உனக்கு என் தலை வணக்கம்
தமிழே என் தாய்மொழித் தமிழே
அன்பின் ஒலியாய் ஆனந்த
எதிரொலியாய்
உணர்வுகள் இன்பமாய் ஒலிக்கும்
மொழியாய்
ஆதி மொழியெனத் தோன்றி
மொழிக்கெல்லாம்
தாய்மொழி நீயென வையகம் கொழிக்க
உணர்ச்சிகள் பேசும் நாடி
நரம்பெல்லாம்
எழுச்சிப் பேரலையாய் எழும்பும்
புரட்சி எழுத்துக்கள்
கோர்த்த சொற்களை
விதைத்தேன்
திக்கித்திணறும் புது
நாகரீக மொழியால்
திசை மறந்துப் பறந்த
திகட்டா
தமிழை மீட்க
தீப் பந்தம் ஏந்தின
ஓடி விளையாடும்
சின்னஞ்சிறு மனதிலும்
அமிர்த மொழியின்
நறுமணத்தைப் பரப்ப
தமிழே தாய்மொழியென
தமிழே முதற்கடவுளென
பிள்ளைப் பார்வையில்
மிளிரும் தமிழ்
சிறக்க..
தாயே..! தமிழே..! பெரும்
காவியங்களின் உயிரே!
முக்கனியின் சுவையாகிய
முத்தமிழைக் காக்க
சங்கம் வைத்து தமிழை
உயிரோவியமாய்
வளர்த்து வாழ்ந்த கவிக்
கடவுளோடு
தமிழின் புகழைப் பாடிப் பாடியே
தமிழ்த் தாயின் இளைய மகளாய்
புதுக் கவி்தைகளின்
காவியத்தலைவியாய்
தாய் மொழியாம் தமிழ்மொழியை உயிரெனக் காத்திடுவேன்
- Get link
- Other Apps
Comments