கீழாநெல்லி.
கீழ்வாய் நெல்லி கீழ்நெல்லி, கீழ்காய் நெல்லி, செடி நெல்லி, என்ற கீழாநெல்லி......
செடி முழுவதும் மருத்துவம் சார்ந்த பகுதியே தேவையான அளவு செடியை அரைத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து மைய அரைத்து உடலில் பூசி சிறிது நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு படிபடியாக நீங்கும், தினமும் அதிகாலையில் கீழாநெல்லி சமூலம் சேர்த்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்மோரில் கலந்து குடித்து வர கல்லீரலில் உள்ள குற்றங்கள், நீங்கி இரத்தம் சுத்தமாகும், இந்த சமூலத்தை சூரணம் செய்து வைத்து கொண்டு தினம் காலை மாலை என ஒரு மண்டலம் தொடர்ந்து விடாது தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், எறிச்சல் இரத்தகுறைபாடு, போன்ற உபாதைகள் படிபடியாக நீங்கும், கீழாநெல்லி சாறு எடுத்து அத்துடன் வெள்ளாடு மூத்திரத்தில் கலந்து கால் மண்டலம் தொடர்ந்து விடாது குடித்து வர மஞ்சள் காமாலை, நரம்புத்தளர்ச்சி நீங்கி நரம்புக்கு பலம்
Comments