உலக சிந்தனை தினம்
உலக சிந்தனை தினம்; வரலாற்றில் இன்று 22/02/2020, world thinking day.
1926-ஆம் ஆண்டு பெண்கள் வழிகாட்டி மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.அமெரிக்காவில் நடந்த 4-ஆம் உலக மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 22-யை ஏன் தேர்ந்தெடுத்தனர்?
பிப்ரவரி 22-ஆம் தேதி ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த தினம் ஆகும்.எனவே அவர்கள் பிறந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே சிறப்பு நாளாக கொண்டாடுவது என முடிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி 22 சிந்தனை தினமாக கொண்டாடி வந்தனர். ஐ.நா. அங்கீகரித்த நிலையில்
1932-ஆம் ஆண்டில் இருந்து சிந்தனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகெங்கிலும் இருந்து நன்கொடை பெற்று இந்த இயக்கத்தை மேலும் உயர்த்த முடிவு செய்து அதன் படி செயல்படுத்தி வர்றாங்க.
“சிந்தனை என்பது உள்ளத்தின் விளக்கு” என்னும் மலேசியப் பழமொழிக்கேற்ப ஒரு நல்ல சிந்தனை ஒளியைப்போலவே நிறைய விளக்குகளை ஒளிரச் செய்யும். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஐசக் நியூட்டனின் சிந்தனை புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஆணிவேராய் இருந்தது. புவியீர்ப்பு விசை உண்டென்றால் அவ்விசையிலிருந்து விடுபட்டால் நாம் விண்ணில் எளிதாகப் பறக்க முடியும் என்ற அடுத்த சிந்தனை உருவாகியது. விடுபடு திசைவேகத்தின் மூலம் உலகப் பரப்பிலிருந்து பறந்து நிலவிலே காலடி வைத்தான் மனிதன். அச்சிந்தனையை மெருகேற்றியதால் இன்று செயற்கைகோள்களை அனுப்பி மண்ணிலிருக்கும் நாமனைவரும் அலைபேசிகளால் ஒன்றிணைந்தோம்.
சிறிய பிரச்சினைகளை பெரிய சுமையாகச் சுமப்பவர்கள் ஆரோக்கியமற்ற சிந்தனையாளர்கள். ஆயிரம் பிரச்சினைகளையும் “இதுவும் கடந்து போகும்” என்று நினைப்பவர்கள் ஆரோக்கியமான சிந்தனையாளர்கள். பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுபவர்கள் உலகளாவிய சிந்தனையாளர்கள். “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கேற்ப நற்சிந்தனை நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. சிந்தனைகளை கவனியுங்கள்; அவை வார்த்தைகளாக மாறும்; வார்த்தைகளை கவனியுங்கள்; அவை செயல்களாக மாறும்; செயல்களை கவனியுங்கள்; அவை பழக்கமாக மாறும்; பழக்கங்களை கவனியுங்கள்; அவை பண்பாக மாறும்; பண்பினை கவனியுங்கள்; அதுவே வாழ்க்கையாகும்.
Comments