மகளிர்பருவமும்உணவு முறையும்.

 மகளிர்பருவமும்உணவு 

 முறையும்மகளிர் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னென்ன உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை சிறிது அறிவோம்.


#குழந்தைபருவம்


⭕ பிறப்பு முதல் 1 வயது வரை


ஒரு சிசுவானது தாயின் வயிற்றில் உருவெடுத்தது முதல் அந்த தாய் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அது அந்த குழந்தையின் வளர்ச்சிக்கும் தாயின் ஆரோக்கியத்திற்கும் உதவும். குழந்தை பிறந்து அரைமணி நேரத்தில் தாய்ப்பால் புகட்ட வேண்டும். ஒரு வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு பின் தாய்ப்பாலுடன் புரத உணவுகளையும் கொடுக்கலாம்.


பொதுவாக கேழ்வரகு கூழ், மசித்த பருப்பு சாதம் ஆகியவையும் கொடுக்கலாம். 6 மாதம் கழிந்தவுடன் கெட்டியான உணவுகளை குழந்தைக்கு சுவைக்கும் வகையில் குழைத்து கொடுக்கலாம். அத்துடன் சூப் வகைகள், வெண்டைக்காய், காரட், பீன்ஸ், மட்டன் போன்றவை ஒரு வேளை கொடுக்கலாம். சாதத்துடன் பருப்பு, ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவையும் அவித்து கொடுக்கலாம். குழந்தை காரம் எடுக்கிறது என்றால் சிறிது காரம் உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். முட்டை சேர்க்கலாம். முடிந்த வரை டின்புட் கொடுப்பதை தவிர்த்து வீட்டில் இருக்கும் ஆரோக்கிய உணவை பழக்க வேண்டும்.


⭕ 1 முதல் 3 வயது வரை


பால், காய்கறிகள், பழங்கள், மீன் போன்றவற்றை குழந்தை விரும்பும் விதத்தில் செய்து தரவும்.


⭕ 3 முதல் 12 வயது வரை


காலை, மாலை 1 கப்பால், காலை கண்டிப்பாக 10 மணி உணவாக வேகவைத்த பட்டாணி, சுண்டல், பயிறு, வாழைப்பழம் அல்லது ஏதாவது பழங்கள் கொடுத்து அனுப்பவும். மதியம் கண்டிப்பாக சாதம், காய்கறிகள் இவற்றை தான் குழந்தைகளுக்கு தரவேண்டும். மாலை பால் அல்லது ஏதாவது ஒரு திரவ உணவு வழங்கவும். இரவு எல்லா குழந்தைகளும் நிச்சயமாக சாப்பிட்டு தான் தூங்க வேண்டும். சாப்பிட்டபின் ஒரு மணி நேரம் கழித்து தான் குழந்தையை தூங்க விட வேண்டும். மீன், மாமிச உணவுகளையும் பழக்க வேண்டும். இவை குழந்தை வளர்ச்சிக்கு உகந்தவையாகும்.


#விடலைப்பருவம்பூப்படையும்வயது


இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் பூப்படையும் வயது குறைந்துள்ளது. 8 முதல் 10 வயதுக்குள்ளும் இருக்கிறது. அதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறையும், உணவு வேறுபாடும் தான். ஆனாலும் இந்த வயதில் பெண் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து மிகவும் முக்கியம். இரும்புச்சத்து மிக்க கீரை, முருங்கைக்காய், மீன் வகைகள், முட்டை ஆகியவை அதிக அளவு கொடுக்கவேண்டும்.


#தாய்மைப்_பருவம்


இந்த பருவத்தில் பெண்கள் விரும்பும் உணவுகளை கொடுக்க வேண்டும். அன்னாசிபழம், பப்பாளிபழம் போன்றவற்றை தவிர்க்கவும். இரும்புசத்து, நார்சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் தேவையாகையால் இந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். இரு வேளை சுத்தமான பால், முட்டை, மீன் அதிகம் சாப்பிட வேண்டும். மீன் அதிக தாய்ப்பால் சுரக்க உதவும்.


#மாதவிடாய்நிற்கும்பருவம் 

#40_வயதுமுதல்_55வயது_வரை


இந்த பருவ பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக தோன்றும் .உடல் எரிவது போலும், எடை அதிகரிப்பது போலும் தோன்றும். இது ஹார்மோன் மாறுதலால் ஏற்படுபவை. இந்த நேரத்தில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு மூட்டு வலிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ரத்தசோகையும் இந்த பருவத்தில் சாதாரணம். இந்த வயது பெண்கள் நிறைய நீர் அருந்த வேண்டும். இரும்பு, கால்சியம் மிகுந்த உணவுகள் உண்ண வேண்டும். குறைபாடு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி இரும்பு, புரோட்டீன் மற்றும் கால்சியம் மருந்துகள் எடுக்க வேண்டும் . மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு மனச்சோர்வு மற்றும் மனக்குழப்பங்கள் ஏற்படுகிறது. இதற்கு தியானம், யோகா மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபடுவது துணையாக இருக்கும்.


#முதுமைபருவம்60வயதுக்கு_மேல் 


இந்த வயதில் உணவே மருந்து. உணவே ஆரோக்கியம். வாய்க்கு சுவையான உணவுகளை விரும்பும் இந்த பருவத்தில் அனைத்து விதமான ஆரோக்கிய உணவுகளையும் உண்ண வேண்டும் . ஒவ்வொரு பருவத்திலும் தனக்கு உகந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம். இயன்றவரை வீட்டில் சமைக்கும் இட்லி, தோசை, சப்பாத்தி , பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், பால் போன்றவற்றை தரவும். கடையில் கிடைக்கும் உணவு பொருட்களை தவிர்க்கவும். பீஸா, பர்கர் போன்றவற்றை குறைக்கவும். ஸ்டீராய்ட் அதிக முள்ள வெள்ளை கோழி இறைச்சியை தவிர்க்கவும். இது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது அல்ல. 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,