சிவகார்த்திகேயன்

 சிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று பிப்ரவரி 17


சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.
திரையுலக தொடக்கம்
சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான 'சூப்பர் சிங்கர்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.
'அது இது எது' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்துள்ள இவர், இயக்குனர் அட்லீயின் 'முகப்புத்தகம்' என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்னர் நடிகர் அஜித் நடித்த 'ஏகன்' திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படாத நடிகராக நடித்துள்ளார் மற்றும் தமிழ் திரைத்துறையில் சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.
2012-ம் ஆண்டு வெளியான 'மெரினா' படத்தில் நாயகனாக நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் அழைப்பினை தொடர்ந்து அப்படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர். பின்னர் மெரினா படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்ணிய நடிகராக உள்ளார்.
வெள்ளித்திரை அனுபவங்கள்
சிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டு மெரினா படத்தில் ஒரு நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் அதே ஆண்டு தனுஷின் '3' படத்திலும் 'மனம் கொத்தி பறவை' படத்திலும் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தவர்.
இவர் 3 படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், பின்னர் மனம் கொத்தி பறவை படத்தில் ஒரு நாயகனாக நடித்து புகழ் பெற்றார். இவர் இப்படத்தில் ஒரு நகைச்சுவையாளராகவும், நாயகனாகவும் நடித்து தனது நடிப்பை நிலையேற்றியுள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்று, இவர் தமிழ் திரைத்துறையில் ஒரு குறிப்பிடப்படும் நடிகராக சித்தரிக்கப்பட்டார். பின்னர் இவர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகராக பல விருதுகளை பெற்று பிரபலமானார்.
இவர் நடிப்பில் வெளியான காக்கி சட்டை, மான் கராத்தே, ரஜினி முருகன் திரைப்படங்கள் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்ற நிலையில், 2016ம் ஆண்டு 'ரெமோ' திரைப்படத்தில் ஒரு பெண் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.
பிரபலம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பணியாற்றி மக்களின் ஆதரவை பெற்ற இவர், 2013ம் ஆண்டு இவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் உள்ள அறிமுக பாடலை பாடி ஒரு பின்னணி பாடகராக பணியாற்ற தொடங்கியுள்ளார்.
பின்னர் மான் கராத்தே படத்தின் "ராயபுரம் பீட்டர்", காக்கி சட்டை படத்தில் "ஐம் சோ கூல்" பாடலை பாடி புகழ் பெற்றார். பின்னர் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தில் "கல்யாண வயசு" பாடலுக்கு பாடலாசிரியராக பணியாற்றி புகழ் பெற்றார். இப்பாடல் அந்த ஆண்டின் ரசிகர்களுக்கு பிடித்த பாடல் என பல விருதுகளை பெற்று பிரபலமானது.
2019-ம் ஆண்டு கனா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அந்த படத்தினை தனது "எஸ் கே ப்ரோடுச்டின்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரைதிரையில் பணியாற்றி பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களை தயாரித்தும், நடித்தும் தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,