மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் உணவுகள்

 மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். இது உலகளவில் ஏற்படும் நோய்களில் முதலிடத்தில் உள்ளது என்றே கூறலாம்.


கடன், வேலையின்மை, காதல் முறிவு, பணப்பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில் பரீட்சை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை தருகின்றன. ஆனால், இந்த மன அழுத்தம் நம்மையும் நமது உடலையும் பாதிக்கின்றது.


அதுமட்டுமின்றி சில சமயங்களில் நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் கூட மன அழுத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவை எந்த மாதியான உணவுகள் என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பது நல்லது.


அந்தவகையில் மன அழுத்தம் ஏற்படமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மன அழுத்தத்தை குறைக்க, நாம் முதலில் நமது உணவில் சர்க்கரையின் அளவை போதுமான அளவிற்கு குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை அதிகளவில் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், நமது உடலில் அதிகளவில் கார்டிசால் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன், உறக்கம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.


சுத்திகரிக்கப்பட்ட, எண்ணெயில் பொரிக்கப்பட்ட துரித உணவுகள்,சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், அதன்மூலமாக, நமது உடலுக்கு அதிகளவில் தீமைகளே ஏற்படுகின்றன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, எரிச்சலான மனநிலையிலேயே நாம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.


நாம் அருந்தும் மது வகையின் அளவு அதிகரித்தால், மன அழுத்தமும் அதே விகிதத்திற்கு அதிகரிக்கும் என்பது நாம் அறிந்திராத உண்மை. நமது உடலில் சேரும் அதிகப்படியான ஆல்கஹால், ஹார்மோன் சுரப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதிக கவலையுடனும், மன அழுத்தத்துடனும் இருக்க வழிவகை செய்துவிடுகிறது.


காபியில் உள்ள காஃபின் வேதிப்பொருள், நமது உடலில் அதிகளவில் சேர்ந்தால், மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, உடல் நடுக்கம் மற்றும் கவலை தோய்ந்த முகம் கொண்டவராக நம்மை மாற்றி விடும்.


மாவு வகைகள் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தாறுமாறாக ஏற்றிவிட்டு விடுகின்றன. இதன்மூலம், கார்டிசால் ஹார்மோன் அதிகளவில் சுரந்து, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறன்றன.


நாம் உணவில் அதிகப்படியான உப்பை சேர்த்துக் கொண்டால், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட அது காரணமாக அமைந்துவிடுகிறது. இதுமட்டுமல்லாது, உயர் ரத்த அழுத்தத்தையும் வரவைத்து விடுகிறது. அதிகப்படியான உப்பு, இதயத்திற்கு அதிக வேலையை கொடுப்பதால், அது சாதாரணமாகவே இயங்க மிகவம் சிரமப்படும் நிலை உருவாகிறது.


பன்றிக்கறி,  மாட்டுக்கறி, சிக்கன், மட்டன்  கெட்சப் போன்ற இறைச்சி வகை உணவுகள் பதப்படுத்தப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன. இவைகளை பதப்படுத்துவதற்கு சோடியம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்த வேதிப்பொருட்கள், நமது உடலின் சக்தியை வீணடிப்பதோடு மட்டுமல்லாது, மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், நமது உடலின் இயங்கு சக்தியை குறைப்பதோடு மட்டுமல்லாது, மனஅழுத்தம் ஏற்படவும் காரணமாக அமைகின்றன. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,