கோபால்சாமி அய்யங்கார்

 கோபால்சாமி அய்யங்கார் காலமான தினமின்று!


😢
தஞ்சாவூரில் 1882 ஆம் ஆண்டு பிறந்தவரான கோபால்சாமி அய்யங்காருக்கு இந்திய அரசியல் களத்தில் மாபெரும் பங்கு உண்டு.
தமிழகத்தைச் சேர்ந்த இவர் தமது பள்ளிப்படிப்பை வெஸ்லி பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை பிரஸிடென்சி கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரியிலும் முடித்தார். படிப்பை முடித்து விட்டு 1904 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஆனால், அது நீடிக்கவில்லை.
அய்யங்கார் 1905 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் சிவில் சர்வீஸ் பணியில் இணைந்து விட்டார். அன்று முதல் 1919 ஆம் ஆண்டு வரை துணை ஆட்சியராகப் பணியாற்றிய பின் 1920 ஆம் ஆண்டு பதவிஉயர்வு பெற்று மாவட்ட ஆட்சியராகவும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆனார்.
அது மட்டுமல்ல, 1921 ஆம் ஆண்டு முதல் பதிவாளர் ஜெனரலாகவும் , பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமும் கூட இவருக்கு உண்டு.
இது கோபால்சாமி அய்யங்காரின் வாழ்வில் முதல் பாகம். அவருக்கு இரண்டாம் பாகமும் உண்டு.
அதில் அவர் தேர்ந்த அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டார். அப்போது தான் காஷ்மீர் பிரதமர் பதவி கோபால்சாமி அய்யங்காரைத் தேடி வந்தது. 1937 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரை ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் பிரதமரானார் கோபால்சாமி அய்யங்கார். தொடர்ந்து இந்திய விடுதலைக்குப்பின் நேரு தலைமையில் அமைந்த சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் அமைச்சராகவும் செயலாற்றினார். அன்றைய இந்தியப் பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி ரயில்வே அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தார்.
இந்திய ஆட்சிப்பணிகள் அடிப்படையிலும் சரி, அரசியல் பணிகள் அடிப்படையிலும் சரி இத்தனை பழுத்த அனுபவம் கொண்டவரான கோபால்சாமி அய்யங்காரின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த நேரு அவரை, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் 13 பேர்கள் கொண்ட ஒரு குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் ஆக்கினார். இப்படித்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவிஅ உருவாக்கிய குழுவின் தலைவர் ஆனார் கோபால்சாமி.
1948 ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேச ஐநாவுக்குச் சென்ற குழுவில் இந்தியா சார்பில் தலைமை தாங்கியவர் இவரே.
அதுமட்டுமல்ல, 1952 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேச இவரையே அன்றைய பிரதமர் நேரு நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவரையிலும் காஷ்மீர் உட்பட இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து இந்திய மாகாணங்கள் விவகாரத்தையும் கவனித்து வந்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் மட்டுமே.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கத் தயாரான பிரதமர் நேருவுடன், படேலுக்கு கருத்து வேறுபாடு தோன்றத் தொடங்கியதும் இந்தப்புள்ளியில் தான். படேலுக்கு அதில் விருப்பம் இருந்திருக்கவில்லை. எனவே தான் காஷ்மீர் விவகாரங்களைக் கையாள கோபால்சாமி அய்யங்காரை நியமித்தார் நேரு என்கிறார்கள் பழைய வரலாறு அறிந்தவர்கள்.
இப்படி இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்திய அரசியல் நடவடிக்கைகளில் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தவரான திவான் பகதூர் சர் நரசிம்ம அய்யங்கார் கோபால்சாமி அய்யங்கார் தமது வாழ்வின் கடைப்பகுதியில் சென்னையில் வாழ்ந்தார்.
இவருக்கு ஜி. பார்த்தசாரதி என்றொரு மகனும், மகள் ஒருவரும் உண்டு. மகன் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்.
மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த கோபால்சாமி அய்யங்கார் 1953 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 10ம் நாள் தமது 71 ஆவது வயதில் இயற்கை மரணம் அடைந்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை உருவாக்கியவர் என்ற பெருமை(?)யும் உடையவராம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,