பாலு மகேந்திரா

 பாலு மகேந்திரா நினைவு நாள் இன்று பிப்ரவரி 13




தனது 75 வது வயதில் மறைந்த பாலு மகேந்திரா தமிழ் சினிமாவை தன் தன்னிகரில்லா ஒளிப்பதிவாலும், இயக்கத்தாலும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்.
1939 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பேராசிரியருக்கு மகனாகப் பிறந்தவர். பாலுவிற்கு பள்ளியில் படிக்கும் போதே சினிமா மீது தீராத காதல் இருந்தது. கொஞ்ச காலம் இலங்கை ரேடியோவிலும் பணிபுரிந்து இருக்கிறார்.
பார்த்த வேலைகள் எதிலும் திருப்தி வரவில்லை, தான் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என்று புரிந்தபோது 1966 ம் வருடம் கிளம்பி இந்தியாவிற்கு வந்து விட்டார். பிலிம் அண்ட் டெலிவிசன் இன்ஸ்டிட்யூட் (புனே) டில் ஒளிப்பதிவு பற்றி பயில ஆரம்பித்தார்.முடித்து வெளியே வரும்போது தங்க மெடலுடன் வழியனுப்பி வைத்தார்கள்.
நெல்லுவில் ஒளிப்பதிவாளராக
1971ல் நெல்லு என்னும் மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்தார். நெல்லு படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரளா அரசு வழங்கியது.
ஐந்தே வருடங்களில்20 படங்கள்
1971 முதல் 1976 வரை சுமார் 2௦ படங்களில் பணியாற்றினார். மலையாள மற்றும் கன்னட படங்களில் அதிகமாக பணி புரிந்துள்ளார்.
முதல் தேசிய விருது
கோகிலா என்ற கன்னட படத்திற்காக 1977ம் வருடம் முதல் தேசிய விருது சிறந்த ஒளிப்பதிவிற்காக கிடைத்தது. அதே படத்தில் சிறந்த திரைக் கதை எழுதியதற்காக கன்னட அரசின் விருதையும் பெற்றார்.
மகேந்திரனால் தமிழுக்கு வந்த மகேந்திரா
இயக்குனர் மகேந்திரன் தனது முள்ளும் மலரும் படத்திற்காக இவரை தமிழுக்கு 1978ம் ஆண்டு அழைத்து வந்தார். தொடர்ந்து மகேந்திரனின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
அழியாத கோலங்கள் மூலம் இயக்குனராக
1979ம் வருடம் அழியாத கோலங்கள் என்ற படம் மூலம் இயக்குனராக மாறிய பாலு தொடர்ந்து மூடுபனி, மூன்றாம் பிறை தொடங்கி கடைசியாக தான் மறைவதற்கு முன்பு இயக்கிய தலைமுறைகள் படத்தையும் சேர்த்து மொத்தம் 15 படங்களை இயக்கி உள்ளார். இவற்றில் பல காலத்தால் அழியாத படங்களாக என்றும் நிலைத்திருக்கும் வகையைச் சேர்ந்தவை.
மூன்றாம் பிறை
இன்றளவும் கமலின் சிறந்த படங்களில் ஒன்றான மூன்றாம் பிறையைப் பார்த்த அனைவருமே சற்று கண் கலங்குவர், சிறந்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவிற்காக மீண்டும் ஒருமுறை தேசிய விருதை பெற்றார்.
மொத்தம் 6 தேசிய விருதுகள்
இயக்குனராக வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள் மற்றும் தலைமுறைகள் ஆகிய படங்களுக்காக 4 தேசிய விருதுகளும் ஒளிப்பதிவாளராக கோகிலா (கன்னடம்), மூன்றாம் பிறை படங்களுக்காக 2 தேசிய விருதையும் சேர்த்து மொத்தம் 6 தேசிய விருதுகளை வென்று இருக்கிறார். தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் கேரள அரசுகளின் விருதுகளை வாங்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு மறைந்தது.
கடந்த வருடம் தனது 75 வது வயதில் இந்த உலகை விட்டு மறைந்த பாலு மகேந்திரா தனது வாரிசுகளாக இளம் தலைமுறை இயக்குனர்களையும் ஒளிபதிவாளர்களையும் தமிழ் சினிமாவிற்கு விட்டு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
பாலு மகேந்திரா மறைந்தாலும் அவர் இயக்கிய படங்கள் என்றும் அவர் பெயரை சினிமாவில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,