மாத்திரையின்றி ஜலதோஷத்தை குணப்படுத்த



🎷குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். 


🎷குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.


🎷சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.


🎷இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.


குறிப்பு 1 :


கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.


குறிப்பு 2


ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.


குறிப்பு 3 ;


ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.


குறிப்பு-4 :


வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.


குறிப்பு- 5 :


மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


குறிப்பு- 6 :


கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.


குறிப்பு- 7 :


வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,