தோஷம் பிடிக்கும் சில செயல்கள்.

 தெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயலுக்கு உண்டாகும் சிறுசிறு தோஷம். அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தோஷம் பிடிக்கும் சில செயல்கள்.   

   


1. ஒரு கோவிலுக்கு எடுத்துச் சென்ற பொருளை அங்கே சேர்த்து விட வேண்டும். அதை மற்ற கோவிலுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.


2. நாம் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை கோவிலில் அமர்ந்து உண்ணும் முன் அங்கே உள்ள ஒரு தெய்வத்திற்கு படைத்து விட்டு உண்ண வேண்டும்.


3. காலை குளிக்காமல் உணவு உண்ண கூடாது.


4. வீட்டில் உள்ள தெய்வங்களை வணங்காமல் வெளியே செல்லக்கூடாது.


5. தெய்வங்களுக்கு அலங்கரித்த பூக்களை நீரில் சேர்க்காமல் தரையில் வீசக் கூடாது.


6. மண் அல்லது மற்ற உலோகத்தினால் ஆன விளக்கில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும்.


7. நாய்க்கு உணவு வைத்து விட்டு அதை ரசிக்கக் கூடாது.


8. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.


9. இரவில் துணி துவைக்கக் கூடாது.


10. இரவில் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.


11. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.


12. வீட்டில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது.


13. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.


14. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.


15. செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மனைவியுடன் சண்டை போடக்கூடாது.


16. வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.


இவைகள் எல்லாம் அறிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் சின்ன சின்ன தோஷங்களாக நம்மிடம் சேர்ந்து நம்முடைய ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், நம்முடைய குல தேவதை, தெய்வம் மற்றும் அருள்களை தரும் குருமாரின் ஆசிகளையும் கெடுத்து விடும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,