மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அமரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம் 22 பிப்ரவரி 1958.
மௌலானா அபுல்கலாம் ஆசாத்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையைஎதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில்
கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். இந்தியாவில் அனைத்து சமூகத்துக்கும் கல்வி கிடைக்க கல்வித்துறையில் சரியான அடித்தளமிட்டார். நாட்டு மக்களின் மீது அன்பு கொண்டு,அவர்களின் கல்வி அறிவை உயர்த்திட கல்வித்துறையில் இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.புதுதில்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் மௌலானா ஆசாத் என்ற இவரது பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
Comments