அலுமினிய தகட்டில் பேக் செய்த உணவு.

 அலுமினிய தகட்டில் பேக் செய்த உணவு....சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயம்.





அலுமினிய தகட்டில் உணவை பேக் செய்து சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்று பார்க்கலாம்.


தற்போது அனைவரும் பார்சல் உணவுகளையே விரும்புகின்றனர். உணவுகளை பார்சல் செய்ய சுற்றி வைக்கப்படும் அலுமினிய தாளானது பொதுவாக மெல்லிய பல்வகை உலோகத்தால் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் பழங்கள் காய்கறிகள் மற்றும் பெரும்பாலான உணவுகளில் இயற்கையாகவே அலுமினியம் இருக்கிறது.


கீரைகள், முள்ளங்கி போன்ற உணவுகளில் மற்ற உணவுகளை விட அதிகமாக அலுமினியம் உள்ளது. வீட்டில் அலுமினியத்தக்கட்டில் உணவு வைத்திருக்கிறார்கள். நாம் அதை சாப்பிட ஆசை படுகின்றோம். ஆனால் இந்த ஆசை உங்கள் ஆரோக்யத்தை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாருக்கும் தெரியுமா?



ஆம் அலுமினியத்தகடுகள் ஆரோக்யத்தை கெடுக்கின்றன.


சுவாச பிரச்சினை:


இதில் சாப்பிடுவதால் ஆஸ்துமா அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதுதவிர நோய் எதிர்ப்பு சக்தியையும் மோசமடைய செய்கிறது.


எலும்புகள் பலகீனம்:


உணவு பொருட்களை அலுமினிய தகட்டில் சுற்றி வைப்பது எலும்புகளை பலவீனப்படுத்தும். அதிலுள்ள அபாயகரமான இரசாயனங்கள் எலும்புகளை பலவீனம் அடைய செய்கிறது. இது மட்டுமல்லாமல் மத்திய நரம்பு மண்டலத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.


புற்றுநோய்:


குழந்தைகளுக்கு உணவை அலுமினிய தகட்டில் பேக் செய்து கொடுத்தால் கவனமாக இருங்கள். ஏனெனில் அவ்வாறு செய்யக்கூடாது. அந்த உணவில் அலுமினிய தகட்டின் கூறுகள் இருக்கின்றன. இது புற்றுநோயை உண்டாக்கும்.


சிறுநீரக பாதிப்பு:


சூடான உணவை அலுமினிய தகட்டில் சுற்றி பேக் செய்வதன் மூலம் அதிலுள்ள கூறுகள் உருகி உணவில் படிந்து விடுகிறது. இதை நாம் சாப்பிடும் போது இந்த அபாயகரமான கூறுகள் உடலுக்குள் செல்கிறது. இதன் காரணமாக கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,