தலையில் காகம் எச்சம் விழுந்தால் வருத்தப்படுவார்களா?

 பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறியதில் வருத்தமில்லை - இளையராஜா


பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறியதில் வருத்தமில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.


இளையராஜாவின் திரைப்பயணம் தொடங்கியதில் இருந்து பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வந்தார். ஆனால் அந்த நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி சொந்தமாக ஸ்டூடியோ நிறுவ திட்டமிட்டார். அதன்படி கோடம்பாகத்தில் இருந்த MM Preview தியேட்டரை வாங்கி ஸ்டூடியோவாக மாற்றியுள்ளார். அந்த புதிய ஸ்டூடியோவில் இன்று முதன்முறையாக இசை கோர்ப்புப் பணிகளை இளையராஜா தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்கினார்.


பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறியதில் வருத்தமில்லை. சாலையில் நடந்து செல்லும்போது தலையில் காகம் எச்சம் விழுந்தால் வருத்தப்படுவார்களா?"என்றார். இளையராஜாவின் ஸ்டூடியோ திறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,