ஜீரணம் ஆக எளிய மருத்துவம்

 ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - 



நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.


விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை, வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும். 


ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம்.


தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை. 


சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,