வானொலி

 ஏழை எளிய மக்களையும் எளிதாகச் சென்றடையும் ஊடகம் என்றால் அந்த காலம் முதல் இன்று வரையிலும் வானொலி ஆகும்.


1894-ம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோனி என்பவரால் வானொலி கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் கல்வி, விவசாயம், கருத்துப் பரிமாற்றம், மருத்துவம், சுகாதாரம், இளைஞர் நலன், மகளிர் நலன் என பல்வேறு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வும், பொழுதுபோக்கு, திரை இசைப் பாடல்கள் எனப் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் போர், இயற்கை பேரிடர் காலங்களில் அழிவிலிருந்து மக்களைக் காப்பதில் வானொலிக்கு முக்கிய பங்கு உண்டு. வானொலிச் சேவையினை உலகறியச் செய்ய வேண்டும் என ஸ்பெயின் நாடு யுனஸ்கோவிடம் 2010-ம் ஆண்டு வேண்டுகோள் வைத்தது. இதனையடுத்து பிப்ரவரி 13-ம் நாளை உலக வானொலி தினமாக யுனஸ்கோ அறிவித்தது. இதேபோல் டிசம்பர் 2011-ல் ஐக்கிய நாடு சபையும் இதனை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து முதல் உலக வானொலி தினம் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் இத்தாலி பைசா நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மனித குலம் இருக்கும்வரை வானொலி இருக்கும் அதற்கான வடிவம் மட்டுமே மாறும். -- வானொலியை கேட்கும் ஊடகம் மாறியிருக்க வேண்டும் என்றுதான் கூறவேண்டும். இன்று தொலைக்காட்சியை பார்ப்பவர்கள் எண்ணிக்கையே தற்போது குறைந்துவிட்டதே எல்லாம் இன்று மொபைலாக மாற்றப்பட்டுவிட்டது. செய்தித்தாள் படிப்பது, வானொலி கேட்பது, சினிமா பார்ப்பது என அனைத்தும் இன்றும் நமது கைபேசிக்கு உள்ளே வந்துவிட்டது. நாம் உதாரணத்துக்கு கைபேசியில் ஒருபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ திடீரென டொங் என்ற ஒலியுடன் நமது கைபேசியில் ஒரு ஒலி வரும் நாம் அதனை நோக்கிச் சென்று விடுவோம். வானொலிக்கான நேயர்கள் மட்டும் அல்ல இதன் மூலம் காட்சி ஊடகங்கள் சார்ந்த நேயர்களும் குறைந்துள்ளனர். இருப்பினும் வானொலிக்கான கூட்டம் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி