தை அமாவாசை

 தை அமாவாசை


11.2.2021   வியாழன்



காலம் காலமாய் நம் வாழ்வு செழித்திருக்க தெய்வப் பலமும் முன்னோர் ஆசியும் அவசியம் தேவை. இந்தப் பேறுகளைப் பெற, அவசியமான சில வழிபாடு களைச் செய்யச் சொல்கின்றன நம் ஞான நூல்கள்.

அவற்றில் ஒன்றுதான் தை அமாவாசை. வருடத்தில் மூன்று அமாவாசை தினங்கள் முக்கியத் துவம் பெறும். அவற்றில் ஒன்று உத்தராயனப் புண்ணிய காலத் தொடக்கமான தைமாதத்தில் வரும் அமாவாசை. மகத்துவம் நிறைந்த இந்த நாளில் செய்ய வேண்டிய முன்னோர் வழிபாட் டின் அவசியங்கள் குறித்து ஞான நூல்கள் விளக்குகின்றன.


ஓர் ஆண்டில் 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று முறையாவது நம் முன்னோரை உரிய காலத்தில் வழிபட வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது நமக்கு நன்மை பயக்கும்.


தை அமாவாசைதை அமாவாசை

புனிதமான இந்தத் தர்ப்பணங் களைச் செய்யாமல் இருந்தால், குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டு நிம்மதி யைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.


மேலும் நாதி தோஷம், பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் தொடரும் சிக்கல்களால் பலவித துன்பங்களும் நேரலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.


இவ்வித பாதிப்புகள் நம்மை அணுகாமல் இருக்க, தை அமா வாசை முதலான தினங்களில் உரிய முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்யவேண்டும்.


சூரியன் பித்ருகாரகன், சந்திரன் மாத்ருகாரகன். எனவே சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை புண்ணிய தினத்தில் தாய், தந்தை வழி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்விப்பது புண்ணிய காரியமாகும். மூன்று தலைமுறையாக வாழ்ந்த நம் முன்னோருக்குச் செய்கிற வழிபாடு, நிச்சயம் நம்மையும் நம் சந்ததியையும் குறையின்றி வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.


தர்ப்பணம்தர்ப்பணம்

மாதம்தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்ய இயலாமல் போனவர்கள், தை - ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை தினத்திலாவது முன்னோரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.


இந்த வருடம் 11.2.2021 (தை-29) வியாழனறு தை அமாவாசை வருகிறது. இந்தத் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் சில உண்டு.


சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாள்களில், வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. சிராத்தம், தர்ப்பணம் செய்கிற வேளையில் பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது.


சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்கள் நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. பூஜையின்போது பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய காரியங் களைச் செய்யக்கூடாது.


பித்ருக்களுக்கு வைக்கப்பட்ட பிண்டங் களை நீர்நிலைகளில் சேர்க்கலாம். பித்ரு காரியங்களைச் செய்தபிறகு, தான தருமங்கள் செய்வதால் கூடுதல் பலன் உண்டு.


அன்று ஓர் ஏழைக்காவது உணவிடுதல் நலம் பயக்கும். வழக்கம் போல காக்கை, பசுக் களுக்கு உணவிடுவதும் நல்லது.


புனித நீராடுதல், விரதம் இருப்பது, மாலை யில் ஆலய தரிசனம் என அனைத்தும் நம்மைப் புண்ணியவானாக்கும்.


பித்ரு காரியம்பித்ரு காரியம்

பிதுர் தர்மங்களைச் செய்யச்சொல்லும் நம் ஞானநூல்கள், நம் முன்னோர்களை அவர்கள் வாழும் காலத்தில் மிக மரியாதையு டனும் வணக்கத்துடனும் நடத்தும்படி அறிவுறுத்துகின்றன.


அமரத்துவம் பெற்ற முன்னோர்களுக்குத் தர்ப்பண வழிபாடுகளைச் செய்யச் சொல்லி அறிவுறுத்துகின்றன.இத னால் கிடைக்கும் புண்ணியம் மிக மேலானது என்கிறது கருடபுராணம்.


சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகியவை அனைத்தும், நம் முன் னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விக்கும். மகிழ்ந்து அவர்கள் தரும் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.


எனவே வரும் தை அமாவாசைத் திருநாளில் புண்ணிய நதி தீரங்களிலோ, அல்லது உங்கள் வீடுகளிலோ, அவரவர் வழக்கப்படி முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளைச் செய்து, ஏழேழ் தலைமுறைக்கும் புண்ணிய பலன்களைப் பெற்று வாழுங்கள்.




அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெற முடியும். 


அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும்.


🌑

சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது

“அமாவாசை” தினமாகும். 


அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெற முடியும். 


அப்படிபட்ட சிறப்பான தினத்தில் “அமாவாசை விரதம்” இருக்கும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.



🌑

முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். 


பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். 


பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும் விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.


🌑

அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும். 


முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.


🌑

மந்திர தீட்சை பெற்றவர்கள் அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும். 

பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.



🌑

நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். 


ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும்.


அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். 


அமாவாசை தினத்தில் விரதம் இருந்து குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்...!!!



தைஅமாவாசையில்தானம்_செய்வோம் 

#முன்னுக்குவரச்செய்யும்முன்னோர்_வழிபாடு

முன்னோருக்கு உகந்த தை அமாவாசையில் தானங்கள் செய்வதும் முன்னோரை வணங்குவதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். இதுவரை பட்ட துன்பங்களிலிருந்தெல்லாம் நிம்மதியும் நிறைவும் பெற்று உயரலாம் என்பது ஐதீகம்.

அமாவாசை என்பது மிக முக்கியமான நாள். நம் முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள். பித்ருக்களுக்கான முக்கியமான நாட்களில், அமாவாசை தினம் மிக மிக விசேஷமானது என்கிறது சாஸ்திரம்.

அமாவாசையில் தை அமாவாசை என்பது ரொம்பவே முக்கியம். இன்னும் இன்னுமான விசேஷமானவை. இந்தநாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். இந்த நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபடலாம். தர்ப்பணம் செய்யலாம்.

அமாவாசை நாளில், நாம் செய்கிற தர்ப்பண ஆராதனைகள், முன்னோர்களுக்கான வழிபாடுகள், செய்கின்ற தான தருமக் காரியங்கள் என பலவற்றாலும் பித்ருக்கள் குளிர்ந்து போகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தானம் செய்தாலே புண்ணியம், தரும காரியங்கள் செய்து வந்தாலே முந்தைய பிறவியின் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். முக்கியமாக, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற ஒவ்வொரு தானத்துக்குமே ஒவ்வொருவிதமான பலன்கள் உள்ளன என்று அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம்.

அமாவாசை நன்னாளில், நம் முன்னோரை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் தானம் செய்தால், வறுமை நிலை மாறும். கடன் பிரச்சினையில் இருந்து மீளலாம். வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயும் தீரும்.

அமாவாசை தினத்தில், யாருக்கேனும் தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் மேற்கொண்டால், சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும்.

தீபம் மற்றும் விளக்கு தானமாகக் கொடுத்தால், பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அரிசி தானம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் பறந்தோடும். எவருக்கேனும் நெய் தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். வருத்தமெல்லாம் மறையும். தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லறத்தில் ஒற்றுமை நீடிக்கும்.

பழங்களை எவருக்கேனும் தானமாக வழங்கினால், புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும். தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும்.

வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். தேங்காய் தானமாக யாருக்கேனும் வழங்கினால், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என தர்மசாஸ்திரம் விளக்குகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,