நினைவலைகள்’

 பிப்ரவரி 14

காதலர் தின கவிதை












‘ நினைவலைகள்’
சன்னமாய்
மனச்சாளரத்தில்
உதிக்கும் சூரியன்….
நித்தம்
எதிர்பார்ப்பை விடாத
இதயத்துடிப்பு…..
செந்நிற
நெற்றிப்பொட்டாய்
மெல்ல எட்டிப்பார்க்கும்
வெண் பனி மூடாத
வெண்ணிற முழுமதி………..
கலங்கரை விளக்காய்
மின்னி மின்னி மறையும்
தாரகைக்கூட்டம்……
நாணத்தால்
இதழ் சிவந்த
ரோஜாப்பூக்கள்………..
முன்னும் பின்னும்
வலை பின்னும்
ஏக்கப்பெருமூச்சின்
வெப்பக்காற்று…………
கத்தும் கடலை
எட்டி உதைத்து
கரையை தட்டி தழுவி
முத்தமிடும் வெள்ளளைகள்…………
இமை மூடாமல்
கனவுகளில்
சஞ்சரிக்கும்
ஈரவிழிப்படலம்……………
இதழ் பிரித்துச்சொல் கொட்டும்
பேச்சின் அருவியில்
நனையும் செவிப்பறைகள்………….,
உன் பெயர்
உச்சரிக்கும் பொதெல்லாம்
நாவில்
தேனாய் சுரக்கும்
உமிழ்நீர்………………
தொடும் துரத்தில்
நீ
தொட்டு உணர
என்
கைகள்…………….
‘வேலண்டைன்ஸ் டே’
வாழ்த்துக்கூற
என் பின்னே
அணி சேரும்
இவையனைத்தும்……………
என்னைக் கொஞ்சும்
முரட்டு காதலனே !
கவிஞர் அனு
(மலேசியா)
‘அனுவின் காதல் ‘
கவிதை தொகுப்பிலிருந்து
நன்றி அனு அவர்களுக்கு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,