விரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள்

 விரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன...?🌐⛔





® விரைவான எடை குறைப்பு நிரந்தரத் தீர்வைத் தராது. எடை குறைப்பு என்ற அந்தத் திடீர் மாற்றத்தை உங்கள் உடம்பால் தாங்க முடியாது. எனவே, அதே வேகத்தில் உடம்பில் மீண்டும் எடை அதிகமாவதற்குத் தான் வாய்ப்புள்ளது.



® நீங்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்கும்போது, உங்கள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தும் படுவேகமாகக் குறைய ஆரம்பிக்கும். இப்படிச் செய்வதால் மயக்கம்,  கிறுகிறுப்பு, இதய வியாதிகள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. தசைகளும் பாதிப்படையலாம்.

 


® வேகமாக எடை குறைப்பதற்கான கடும் உடற்பயிற்சி காரணமாக உங்களுக்கு வேகமாகக் களைப்பு ஏற்பட்டு விடும். உடம்பில் கலோரிகளும் மளமளவென்று குறைந்துவிடும். இதனால் சரியான நேரத்தில் உங்களால் தூங்க முடியாது. களைப்பு இருப்பதால் சரியாகத் தூங்கவும் முடியாது.


 

® உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் பித்தப் பையில்தான் சென்று சேரும். இந்நிலையில் வேகமாகவும் கடுமையாகவும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது, பித்தக் கற்கள் நிறைய உருவாகி விடும். இது வயிற்றின் உள் பகுதியைப் படிப்படியாக சேதமாக்கும் ஆபத்து உள்ளது.

 


® வேகமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, கடுமையாக டயட்டில் இருக்க முயற்சிப்பீர்கள். இதனால், உங்கள் உடம்புக்குத் தேவையான எல்லாப்  பொதுச் சத்துக்களும் மளமளவென்று குறைந்துவிடும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,