கொத்தமங்கலம் சுப்பு

 இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்றுஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது. ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம்.
📮விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் 'தில்லானா மோகனாம்பாள்'. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது. தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய'ராவ் பகதூர் சிங்காரம்' என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை பின்னாளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் 'தில்லானா மோகனாம்பாள்' நாவலைவிடவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஓர் சம்பவம் வாசன் மற்றும் சுப்புவின் அரிய குணத்தை பறைசாற்றியது. கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குநர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூகப் படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன். உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார்.
இங்குதான் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என். ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்" என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என். எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார் ஏ.பி. என்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,