காதல் செய்யுங்கள்

 காதல் செய்யுங்கள்

                                                                        --கவிதை           



கவிதைக்கு

அடிப்படை

காதல்..

காத்திருப்பு..


இறையை

தன்னை..

உறவை..

இயற்கையை..

பொன்னை..

பொருளை..

புவியை..

புகழை..


எல்லா

விருப்பும்

காதல்

தான்...


நெறிப்படுத்தி

முறைப்படுத்தி

வாழ்ந்தால்

சுகமே

தான்..


காதலை

அலர்(புறம் கூறல்.

            வதந்தி)....

ஆக்காமல்..


அலரின் (மலர்)

மென்மையை

அறிந்தே

உணர்ந்து..


அலரை(நீர்)

வார்த்து

அன்புப் பயிரை

வளர்த்தே..

காத்தால்..


தினமும்

காதலர் தினம்..

திரும்பும்

திசையெல்லாம்

அன்புமயம்.


வாழ்க காதல் வளமுடன்..

வாழ்க்கை

முழுவதும்

நலமுடன்.





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி