பாபா ஆம்தே’

 இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரும் காந்தியவாதியும் ‘பாபா ஆம்தே’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான முர்ளிதர் தேவிதாஸ் ஆம்தே (Murlidhar Devidas Amte) காலமான தினம் இன்று .💐 ஒருநாள் சாலையோரத்தில் தொழுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. முதலில் அங்கிருந்து ஓடிவிட்ட அவர், மனம் பொறுக்காமல் மீண்டும் அங்கு சென்று அந்த மனிதனுக்கு உணவளித்து, மூங்கிலால் ஆன சிறிய குடிலையும் அமைத்துக் கொடுத்துப் பராமரித்தார். இதுதான் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இதை அடுத்து ஆம்தே’ வரோராவைச் சுற்றி ஐம்பது கி.மீ. சுற்றளவில் 11 தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். நிலத்தை சரிசெய்து, சிறு குடில்களை அமைத்தார். ஏராளமான நோயாளிகள் வந்து சேர்ந்தனர். கைத்தொழில் பயிற்சி அளித்தார். தொழுநோயாளிகள் தயாரிக்கும் பொருள்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் கிடைத்த லாபத்தைக்கொண்டு பார்வையற்றோருக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரை அன்புடன் ‘பாபா ஆம்தே’ என்று அழைத்தனர்.
எந்த மக்களை சமூகம் ஒதுக்கி வைத்ததோ அவர்கள் கரங்களினாலேயே பள்ளிகள், கல்லூரியைக் கட்ட வைத்தார்.
1988-ல் இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி பாரத் ஜோடோ (இந்தியாவை இணைத்தல்) பாத யாத்திரை தொடங்கிய இவர், 5 ஆயிரம் மைல் தூரம் நடை பயணம் மேற்கொண்டார்.
பத்ம விபூஷன், காந்தி அமைதிப் பரிசு, மகசேசே ஆகிய ஏராளமான தேசிய, சர்வ தேச விருதுகள் அவரைத் தேடி வந்தன. இறுதி மூச்சு வரை பின்தங்கிய மக்களுக்காகவே பாடுபட்ட வந்த பாபா ஆம்தே 2008-ம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் இதே 9ம் தேதி 94-வது வயதில் மறைந்தார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,