National Weatherman day /Weather person day

 National Weatherman day /Weatherperson dayToday  (05-02-2021)



First Weatherman in the World :

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ம்தேதி Weatherman day கொண்டாடப்படுகிறது. அமேரிக்காவை சேர்ந்த ஜான் ஜெப்ரின் என்பவர் 1774 ம் ஆண்டு வானிலை ஆராய்ச்சி பணியை தொடங்குகிறார். இவர்தான் உலகின் முதல் வானிலை ஆராய்ச்சியாளர். 


வானிலை ஆய்வு சிக்கலான பணி :

மழை  புயல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த நிகழ்வை முன் கூட்டியே கணிப்பது மிகவும் சிக்கலானது . வானிலையை எந்தவொரு தொழில்நுட்ப வசதியாலும் கணிக்க முடியாது. ஆனால் கடந்த கால மழை புள்ளி விவரங்களை வைத்தும் நம் அனுபவத்தாலும் எளிதாக கணிக்க முடியும் இது எனது தனிப்பட்ட கருத்து.


#நம்நாட்டில்அமைக்கப்பட்டமுதல்வானிலைமையம் :


இந்தியாவில் முதல் முதலாக சென்னையில் தான் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த வானிலை மையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை தினசரி வானிலை தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். சென்னை வானிலை ஆய்வு  மையத்துக்கு ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. 


வானிலை ஆராய்ச்சியாளரின் பணி என்ன? 


வானிலை ஆய்வை பொறுத்தவரை அரசு வானிலை ஆய்வு மையம் தனியார் வானிலை ஆய்வு மையம் மேலும் பல தன்னார்வலர்கள் இப்பணியை மேற்கொள்கிறார்கள். இவர்கள் தினசரி பதிவாகும் மழை காற்று வீசும் திசை மேகங்கள் உருவாகும் இடம் கடல்பரப்பு வெப்பநிலை புயல்கள் நகரும் பாதை உள்ளிட்ட அனைத்து வானிலை சார்ந்த பணிகளையும் ரேடார் மற்றும் செயற்கைகோள் படங்களை கொண்டு மேற்கொள்வார்கள். 


மழைக்கு விடுமுறை உண்டு ஆனால் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு விடுமுறை இல்லை . மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் எங்களது ஆய்வு தினசரி தொடரும். 


தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்:


தமிழக மக்களை பொறுத்தவரை வானிலை அறிவிப்பை விமர்சனம் செய்கிறார்கள் அவர்களுக்கு வானிலை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நம் தலையாய பணியாக இருக்க வேண்டும்.அனைவரையும் மரம் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் இயற்கையை அழித்து விட்டு மழையை எதிர்பார்க்க முடியாது.  


கடந்த காலங்களில் தமிழகம் பெற்ற மழை அளவுகள் மற்றும்  தற்போது தமிழகம் பெறும் மழை அளவுகள் குறித்த தகவல்களை சேகரியுங்கள்.  இரண்டுக்கும் உள்ள ஒப்பீடுகளை பார்த்து தீர்வு காணுங்கள். இவைதான் வானிலையை புரிந்து கொள்வதற்கான படிக்கல்.மேலும் புதிய புதிய தகவல்களை கற்பதன் மூலம்   மிக சிறந்த வானிலை வல்லுநராக முடியும். 


இன்று National Weatherman day கொண்டாடப்படுகிறது இந்நன்னாளில் வானிலை பணியை மேற்கொள்ளும் அரசு வானிலை மையம் தனியார் வானிலை மைய அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் .எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் சுயநலம் எதுவும் இன்றி மக்களுக்கு தினசரி வானிலை அறிவிப்பு வெளியிடும் அனைத்து வானிலை ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். #nationalweathermanday #nationalweatherpersonday #tamilnaduweatherupdate #tamilnadutourism 


-T.Raja M.Sc.,M.Ed.,M.Phil https://www.facebook.com/Tamilnaduweatherblog/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,