WhatsApp சாட்களை ஈஸியா Telegram-க்கு Move செய்வது எப்படி

 

WhatsApp சாட்களை ஈஸியா Telegram-க்கு Move செய்வது எப்படி (Android, iOS)


வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை டெலிகிராம் ஆப்பிற்கு மாற்றும் அம்சம் அறிமுகம். இதை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக மற்றும் ஐபோன் வழியாக செய்வது எப்படி என்கிற எளிய வழிமுறைகள் இதோ.


வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி கொள்கைகளால் உருவான "சூடு" தற்காலிகமாகத்தான் குறைந்துள்ளது. அ

ஏனெனில் பிப்.8 ஆம் தேதிக்குள் கட்டயாமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்த வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி கொள்கைகள் மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஆகமொத்தம் வாட்ஸ்அப் அதன் புதிய ப்ரைவஸி பாலிஸிகளை வாபஸ் வாங்கிக்கொள்ள போவதில்லை, எதிர்பாராத விதமாக கிளம்பிய எதிப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் பயந்து தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்பதே நிதர்சனம்.

எனவே சில மாதங்கள் காத்திருந்து, வாட்ஸ்அப்பில் இருந்து வேறு ஒரு ஆப்பிற்கு மாறுவதற்கு பதிலாக இப்போதே மாறினால் என்ன? என்கிற எண்ணம் உங்களுக்கு தோன்றினால், அதை வரவேற்கும்படியான ஒரு டெலிகிராம் அம்சம் அறிமுகமாகி உள்ளது.


அதுதான் - எக்ஸ்போர்ட் சாட். டெலிகிராம் ஆப் அதன் சமீபத்திய அப்டேட்டில் இந்த புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தினை உங்கள் சாட்களை வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராமிற்கு நகர்த்தலாம்.

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் பல பயனர்களை வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராமிற்கு மாற தூண்டின. புதிய பயனர்களின் திடீர் வருகையால், கடந்த ஜனவரி மாதத்தில் டெலிகிராம் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் ஆகவும் உருமாறியது.

சென்சார் டவரின் சமீபத்திய தரவுகளின்படி இந்த ஆப் 63 மில்லியன் நிறுவல்களுடன் முதலிடத்தைப் பிடித்தது, இதற்கு மூலகாரணமாக வாட்ஸ்அப் 5 வது இடத்தை மட்டுமே பிடித்தது.

வெளியான தரவுகளின்படி, மிகப்பெரிய எண்ணிக்கையிலான நிறுவல்கள் இந்தியாவில் இருந்தும் (24 சதவிகிதம்), இந்தோனேசியாவில் இருந்தும் (மொத்த பதிவிறக்கங்களில் 10 சதவிகிதம்) நிகழ்த்தப்பட்டுள்ளது.

நாம் இங்கே பேசும் புதிய அம்சமானது டெலிகிராம் அதன் சமீபத்திய 7.4.1 வெர்ஷன் வழியாக வெளியிட்டுள்ளது.

எனவே உங்கள் வாட்ஸ்அப் சாட்களை டெலிகிராம் ஆப்பிற்கு மாற்றுவதற்கான செயல்முறையைத் தொடர முன் உங்கள் ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் டெலிகிராம் வெர்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவும். பின்னர் கீழ்வரும் எளிய செயல்முறைகளை பின்பற்றவும்

ஆண்ட்ராய்டு வழியாக வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராமிற்கு சாட்களை மாற்றுவது எப்படி?

- வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட சாட்-ஐ திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளைத் கிளிக் செய்யவும்.

- பின்னர் எக்ஸ்போர்ட் சாட் என்கிற விருப்பத்தை கிளிக் செய்து Share மெனுவில் டெலிகிராம்-ஐ தேர்ந்தெடுக்கவும்.

- மீடியாவுடன் அல்லது மீடியா இல்லாமல் Restore செய்யும்படி கேட்கப்படுவீர்கள். உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்யவும்.

- இப்போது, டெலிகிராம் உங்கள் மெசேஜ்களை வெற்றிகரமாக மாற்றும் வரை மற்றும் செயல்முறை முடியும் வரை நீங்கள் இம்போர்ட் ஸ்க்ரீனில் காத்திருக்க வேண்டும், அவளவுதான்!

ஐபோன் வழியாக வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராமிற்கு சாட்களை மாற்றுவது எப்படி?

- வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட சாட்-ஐ திறந்து, மேலே உள்ள காண்டாக்ட் ப்ரொபைல் புகைப்படத்திற்கு அருகில் உள்ள பகுதியை கிளிக் செய்யவும்.

பின்னர் எக்ஸ்போர்ட் சாட் என்கிற விருப்பத்தை கிளிக் செய்து Share மெனுவில் டெலிகிராம்-ஐ தேர்ந்தெடுக்கவும், பின்னர் ஆண்ட்ராய்டில் செய்யப்பட்ட அதே வழிமுறைகளை பின்பற்றவும்.

நினைவூட்டும் வண்ணம் ஐஓஎஸ்-இல், நீங்கள் வாட்ஸ்அப்பின் மெயின் சாட் ஸ்க்ரீனுக்கு சென்று, ஒரு சாட்-ஐ இடதுபுறமாக ஸ்வைப் செய்தும் கூட குறிப்பிட்ட சாட்டிற்கான எக்ஸ்போர்ட் சாட் விருப்பத்தை அணுகலாம்.

டெலிகிராம் படி, நீங்கள் இம்போர்ட் செய்யும் செய்திகள் ஒரிஜினல் டைம் ஸ்டாம்ப்களைக் கொண்டு செல்லும், அதாவது அவை எப்போது அனுப்பப்பட்டன அல்லது பெறப்பட்டன என்பதை நீங்கள் பார்க்க முடியும், அதாவது நீங்கள் அந்த மெசேஜ்களை வாட்ஸ்அப்பில் பார்த்ததைப் போலவே.

மேலும், இடம்பெயர்ந்த மெசேஜ்களும் மீடியாக்களும் உங்கள் ஸ்மார்ட்போனில் கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்ளாது, ஏனெனில் அவை டெலிகிராமின் சேவையகங்களுக்கு நகர்த்தப்படும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,