ஏழு வருடத்தில் 100 படம் நடித்த ஒரே நடிகர்

 ஏழு வருடத்தில் 100 படம் நடித்த ஒரே நடிகர் இவர்தான்.. நம்ம ஊர் ஜேம்ஸ்பாண்ட்



இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பதே பெரிய சவாலாக இருக்கும் நிலையில் ஏழு வருடத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகரை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.

அந்த காலத்தில் பெரும்பாலும் இப்போது படம் தயாரிப்பதுபோல் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாக இருந்தது இல்லை. சரியாக திட்டமிட்டு வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்து வெளியிட்டு விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு படமும் நீண்ட நாட்கள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்கு முன்புவரை ஒரு நடிகர் வருடத்திற்கு குறைந்தது நான்கைந்து படங்களிலாவது நடித்து விடுவார்கள். அந்த வகையில் 7 வருடத்தில் 100 படங்களில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியவர்தான் நடிகர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் இரவும் பகலும் மேலும் படத்தின் மூலம் அறிமுகமானார்.


முதல் படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஏழு வருடங்களில் 100 படங்களில் நடித்துக் கொடுத்தாராம் ஜெய்சங்கர். இதுவே அன்றைய கால நடிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.


ஜெய்சங்கர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அதிகமாக ஹீரோயினாக ஒப்பந்தமானவர் ஜெயலலிதா. மற்ற படங்களை காட்டிலும் ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என  பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்


rudra


.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,