மகளிர் தின மலர் 2021 / பூவிலும் மென்மையானவள்

  பூவிலும் மென்மையானவள்இறைவனின் படைப்புகளில் ஓர் அற்புதமான படைப்பு பெண். அவள் பூவிலும் மென்மையானவள் ஆனால் உள்ளத்தின் உறுதியோ அசைக்க முடியாத பாறையாய் ! பிறப்பென்னவோ ஒன்று தான் அவதாரங்கள் தான் பல பல "தாய்க்கு சேயாகவும், தந்தைக்கு மறு தாயாகவும் தெரிவாள் பெண், விட்டுக் கொடுத்து மகிழ்வதில் உடன்பிறப்பாகவும், உற்றதோர் தோழியாகவும், மனைவியாகவும், தன் சேயருகே மீண்டும் தாயகிறாள்" பெண். 


பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் இன்று பல துறைகளில் சிறந்து விளங்கினாலும், மகாத்மா காந்தி அவர்கள் விரும்பியது போல் அவள் ஒரு சுதந்திர பறவையாய் இல்லை என்பது தான் உண்மை. ஒரு பெண் எப்போது தன்னந்தனியே நள்ளிரவில் எந்த ஒரு பயமும் இன்றி நடந்து செல்கிறாளோ அப்போது தான் உண்மையான சுதந்திரம் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால் இந்த கலியுகத்தில் பகலில் கூட ஒரு பெண் சுதந்திரமாய் நடக்க முடிவதில்லை. காமவெறி பிடித்த ஒரு கூட்டம் எப்போதும் அவளைச் சுற்றி கொண்டு தான் இருக்கிறது பிணம் தின்னும் கழுகைப் போல!

பார் புகழும் உயரத்தில் பெண்கள் சிறந்து விளங்கினாலும் இன்னும் சில பெண்கள் வீட்டுக்குள்  அடைபட்டு அடிமைப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்க சில மிருகங்களால் மட்டுமல்ல, தானும் ஒரு பெண் என்பதையே மறந்து தன் இனத்திற்கே துரோகம் செய்யும்  மனிதாபிமானமற்ற சில உறவுகளாலும் கூட. இவையெல்லாம் மறந்து நாம் இந்த மகளிர் தினத்தை கொண்டாட வேண்டுமா ? கொஞ்சம் சிந்தியுங்கள். 


வானில் உயர பறக்கும் பட்டமாய் அவளை பறக்கவிட்டு அதை தன் கைப்பிடியில்  பிடித்திருக்கும் நூலாய் தான் இந்த சமூகம் இருக்கிறது.

பெண்ணை அவளாகவே இருக்க விடுங்கள் உங்கள் ஆசைகளை விருப்பங்களை அவள் மேல் திணிக்காதீர்கள். மனைவியை தவிர பிற பெண்களை தன் உடன்பிறப்பாக எண்ணுங்கள்.  அவளும் ஒரு சக உயிர் என்று நினைத்தாலே போதும்.நித்யஸ்ரீ

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,