விட்டுக்கொடுப்பதாலே பெண் வெற்றி பெறுகிறாள்/மகளிர் தின மலர் 2021

விட்டுக்கொடுப்பதாலே பெண் வெற்றி பெறுகிறாள்                                                                                                      மகளிர் தின மலர் 2021,

 மகளீர்தினம் இதை கண்டிப்பா ஒரு ஆண் தான் கண்டு பிடிச்சு இருப்பான்.

தன்னுடைய நன்றியை வெளிப்படையாவும் சொல்லனும் அதே சமயத்துல தான் சொல்லாத மாதிரி பெண்களாகவே கொண்டாடிக்க வேண்டியதாகவும் இருக்கனும்னு யோசிச்சு இருப்பான். எப்பவும் வீட்டுல ஆண் இடும் கட்டளைகள் பெண்கள் வழியாகவே நிறைவேற்றப்படுவது தானே வழக்கம்?


மனித தோற்றத்தின் அடிப்படை உரிமையை விட்டுக்கொடுத்ததில் இருந்து இப்போது வரை விட்டுக்கொடுப்பதாலே பெண் வெற்றி பெறுகிறாள். எல்லா குழந்தைகளும் உருவாகும் போது ஒரு ஸ்டேஜ் வரை பெண் குழந்தைகளாகவே உருவாகின்றன பிறகு அந்த கருவின் ஒய் ஜீன் இருக்கும் பட்சத்தில் அந்த கருவானது மறு கூட்டமைப்பின் மூலம் தலை முதல் கால்வரை ஆணாக கட்டமைக்கப்படுகிறது... ஆக பெண்ணில் இருந்து தான் ஆண், அப்போது இருந்து இப்போது வரை சொல்லப்படும் ஆதாமின் விலா எழுப்பில் இருந்து தோன்றியவள் இல்லை பெண். அதற்கு இன்னும் சான்றாக இருப்பது ஆண்களுக்கு இருக்கும் நிப்பிள்ஸ். ஆனாலும் இன்று வரை ஆமாம் ஆணில் இருந்து தோன்றியவள் பெண் என்பதை ஒத்துக்கொள்வதாக விட்டுக்கொடுத்துக்கொண்டே தான் வருகின்றோம்.

ஆண் எதுவுமே செய்வது இல்லையா? ஒவ்வொரு சக்சஸ்ஃபுல் பெண்ணுக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பான். அது உதவியாகவோ அல்லது உபவத்திரமாகவோ. பெண் விட்டுக்கொடுப்பதாலும் ஆண் தட்டி கொடுப்பதாலும் மட்டுமே குடும்பம் என்னும் அமைப்பு சிதறாமல் இருக்கிறது. வீட்டில் நடக்கும் பல விழாக்களை பற்றி எதுவும் சொல்லாத ஆண்கள் ஏனோ இந்த மாதிரி பெண்கள் தினம் கொண்டாடுவதை மட்டும் பலமாக எதிர்க்கிறார்கள். பல பதிவுகள் நக்கலாகவும் மனசு நோகும்படியும் பார்க்க முடிகிறது. பெண்களே இல்லாத உலகத்துக்கு சென்று விடலாமே இவர்கள்? பெண்ணின் ஒரு நாள் கொண்டாட்டத்தை கூட தாளமுடியாதவர்கள் எப்படி தான் மனைவி, மகள், தாயை எல்லாம் மதிப்பார்கள்?

யார் சொன்னது பெண்கள் பொறாமைக்காரர்கள்னு?

குடும்பம் என்னும் அமைப்பில் உள்ள அப்பா, அண்ணன், தம்பி, கணவன், மகன், பேரன் மற்றும் கணக்கில் அடங்கா சகோதரர்கள், நண்பர்கள் , நல்ல மனம் படைத்த ஆண்கள் இருக்கும் வரை பெண் ஜெயிப்பதில் சந்தேகமில்லை.
பெண்ணை அடிமைபடுத்து என்பது சத்தியத்தில் முடியாத காரியம். அப்படி அடிமைபட்டு கிடக்கிறாள் என்றால் அவளாக விருப்பபட்டு அடிமையாக இருக்கிறாள் என அர்த்தம். எல்லா நாளும் சொல்வது தான் இருந்தாலும் இன்னைக்கு கூடுதலா ஒரு கவனம் செலுத்தி சொல்வது போல தான் இந்த வாழ்த்தும்.


அனைத்து சக தோழிகளுக்கும் மற்ற பெண்களுக்கும்
வாழ்த்துக்கள்
.
என்னடா இவளே வாழ்த்திக்கிறாளேனு நினைக்க வேண்டாம். முதலில் நான் என்னை வாழ்த்திக்கிட்டு நல்லா இருந்தா தான் மற்றவர்களையும் வாழ்த்த முடியும்

.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,