பெண் / கவிதை -- மகளிர் தின மலர் 2021,

 பெண்       



                                                                 கவிதை   --      மகளிர் தின மலர் 2021




வையமே பெண்ணை நீ 

போற்றாமல் போனாலும் 

தூற்றாமல் இரு ..... 

பெண்களை நீ கண்களாய் 

மதிக்க வேண்டாம் 

ஆனால் ஒரு கல்லாய் 

மிதிக்காமல் இரு ... 


நீ ஒரு பெண்ணாய் பிறந்தும் கூட 

என்னை குப்பைத் தொட்டியில் எறிந்தாய் 

நான் உனக்கு பெண்ணாய் பிறந்த 

ஒரு காரண்த்திற்காக ? 


குப்பைத் தொட்டியும் கூட 

ஒரு தாயாகி போனதே 

அந்த சில நிமிடங்கள் ? 

நீ என்னை தூக்கிஎறிந்து சென்ற போது .... 


ஆனால், 


இங்குதான் இன்னும் எத்தனை 

மலடிகள் இருகிறார்கள் 

அவர்கள் வயிற்றில் 

ஒரு உயிர் ஜனிக்காமல் போனதால் ? 


செல்வத்துள் செல்வம் 

பெருஞ்செல்வம் 

மழலைச் செல்வம் 

அந்த மழலை நான் பெண்ணாய் 

பிறந்து உனக்கு வறுமைக் காலம் 

வந்து விட்டது என்றெண்ணி 

உன் அறியாத் தனத்தினால் 

என்னை உதறித் தள்ளினாய் ... 


பெண் சிசுவை பெண்களே 

அழித்திடும் கலியுக காலமும் இதுவோ ? 

அன்று அரக்கர்களை வதம் செய்த பெண்கள் 

இன்று தன் இனத்தையே 

வதம் செய்யும் காலமும் வந்ததே .... 


பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை 

பெண்மையை காட்டிலும் தெய்வம் இல்லை 

என்ற வாக்கும் பொய்த்து போனதே 

இந்த கலியுக அன்னையர்களால் ....! 

பாசமும் இங்கு உருகும் 

மெழுகாய் போனதே….?


                                              


நித்யஸ்ரீ

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,