Monday, March 8, 2021

தமிழகத்தின் முதல் பொட்டிக் டிசைனரான சிந்து /மகளிர் தின மலர் 2021, தமிழகத்தின் முதல் பொட்டிக் டிசைனரான சிந்து /


                                                                                 மகளிர் தின மலர் 2021,

எதையாவது சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். எதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்’  என்கிறார் மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்தின் முதன் பெண் பிரதமர்)உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இளைய தலைமுறையினர் மற்றும் அனைத்து மகளிர்களுக்கும் உதாரணமாக திகழும் தமிழகத்தின் முதல் பொட்டிக் டிசைனரான சிந்து அவர்களின் வாழ்க்கை பயணம் போராட்டங்கள் நிறைந்த ஊக்குவிக்கும் வாழ்க்கை.

ஏனென்றால் இன்று  பெண்களின் வளர்ச்சி பார்ப்பவர்களுக்கு சாதாரணமான ஒன்றாக தெரியுமளவில் மாறிவிட்டது.அது தான் பெண்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூட கூறலாம்.அப்படியான வகையில் சாதனை பெண்களின் வாழ்க்கை வலியையும் சுகமாக மாற்றக் கூடிய பக்குவம் பெற்றது.


இந்த வகையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிந்து அவர்கள் கூலி தொழிலாளியின் மகளென்று தன்னை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி (Single Parenting) என்று சொல்லிக்கொண்டே தந்தையின் மீதான அதீத அன்பை வெளிப்படுத்தும் இடம் சற்று அமைதி கொள்கிறது.

பொதுவாகவே தையல் கலை என்பது அனைவராலும் பெரியதாக விரும்பப்படாத ஒன்று.ஆனால் சிந்து அவர்கள் தையல் கலை மீதான விருப்பத்தால் சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு வித்தியாசமான ஆடைகள் அணிவதில் அதிக நாட்டம் இருந்தது என்கிறார்.


வலி இல்லாமல் வழி உருவாகாது என்பதற்கிணங்க இழப்புகள் போராட்டங்கள் பிரச்சினைகள் மன உளைச்சல் இவற்றையெல்லாம் கடந்து சாதனைப் பெண்ணாக தன்னை அங்கிகாரம் செய்தது மட்டுமின்றி  சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதில் கூட தன்னை ஊக்கப்படுத்தி கொள்கிறார்.

படித்து கொண்டே இரவு நேரங்களில் அக்கம் பக்கத்தினரின் துணிகளை தைத்து கொண்டும் தனது இரு குழந்தைகளையும் வளர்த்தும் வந்துள்ளார்.மேலும், இவர் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


குழந்தைகளுக்காக தைக்க தொடங்கி இன்று டெக்ஸ்டைல் டிசைனிங் , பொட்டிக் மற்றும் டெக்னாலஜி ஃபேஷன் துறைகளில் திறமையை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.மேலும், கல்யாண முதல் அனைத்து விதமான விசேஷங்களுக்கும்  மேற்கத்திய ஆடை வகைகளையும் வித்தியாசமான முறையில் செய்து தருகிறார்.


விஜய் டிவி பிரபலங்களான மைனா ,பாரதி கண்ணம்மா ரோஷினி , மேக் அப் ஆர்டிஸ்ட் செளமி ,கேபரலா,அஸ்மிகா,மவுனிகா , யாஷிகா , மணிமேகலை  ராஜா ராணி அர்ச்சனா ஆலியா மானசா பவித்ரா லக்ஷ்மி  மற்றும் பல நடிகைக்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.பார்ப்பவர்களுக்கு குறுகிய கால வளர்ச்சி போன்று தான் தோன்றும்.ஏனென்றால் நாம் எப்போதும் பார்வையாளர்களாகவே இருக்க பழகிவிட்டோம்.ஒவ்வொரு குறுகிய காலமும் மீண்டெழுந்ததால் மட்டுமே சிந்து அவர்கள் இன்று அனைவராலும் பாராட்டப்படுகிறார். 


"நீ நீயாக இருந்தால்" மட்டுமே வாழ்க்கையை வாழ முடியும் என்று சிந்து அவர்கள் சொல்லும் முடிவானது உண்மை தானே.நாம் எல்லாரும் நமக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினாலே வாழ்க்கை மீதான பிடிப்பு சற்று அதிகமாகி கவலைகள் நம்மை தின்று விடலாம் பார்த்துக் கொள்ள முடியும்.


ஆக வாழுங்கள் !


அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


Sindhu costume designer

No 9 c block gandhiji Street

Anna Nagar East

Chennai

91763 45186


- கீர்த்தனா பிருத்விராஜ்

1 comment:

Suresh said...

அருமை அருமை

எளிய பெண்ணாக பிறந்து அரிய சாதனைகள் படைக்கும் பெண்கள் பற்றி தொடர்ந்து எழுதுங்க.

சகோதரி சிந்து அவர்களின் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

Featured Post

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க தினம்

  பன்னாட்டு பல்லுயிர் பெருக்க தினம் மனிதர்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசி...