தேர்தல்

 தேர்தல்



ஓர் அரசு, சமூக நீதியை நிலைநிறுத்தி, கல்வியை, சிறந்த மருத்துவத்தை அனைவருக்கும் சாத்தியமாக்கி, சாதி மத பாரபட்சமற்ற, ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை கொடுத்தாலே, இங்கு பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கும்,

 வரிகள் சரியாக செலவிடப்படும், வறுமை நீங்கும், ஆனால் இதெல்லாம் முடியாதென்றுதான் எப்போதும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி தெளிக்கிறது கட்சிகள், இந்த இலவசங்களுக்கும் டெண்டர் விடப்பட்டு அதுவும் சொந்தகாரர்களுக்கே விடப்பட்டு, அதிலும் ஊழல் நடைபெற வசதியாக இருக்கும்! 


மாநகரில் சாலைகளில் கூட தரம் இல்லை, கட்சி அலுவலகத்தின் வசதிக்காக வாகனங்கள் நிறுத்தப்பட சாலைகள் முடக்கப்படுகிறது, சென்னையில் எந்த நடைபாதைகளும் நடப்பதற்கு இல்லை, அத்தனையிலும் ஆக்கிரமிப்பு, சாலையில் நின்றுக்கொண்டு நீங்கள் எந்த சாலையை பார்த்தாலும் அது 20,40, 60 அடியாக ஒரே சீராக தெரியாது, இழுத்து வளர்த்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளால் பல சாலைகள் குறுகி குறுகி சுருங்கி வருகின்றன, சுகாதரமான கழிப்பறைகள் இல்லை, கட்சி பெருமைக்காக கட்டப்பட்டவைகள் குப்பைக்கூடங்களாக மாறி இருக்கின்றன, விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது, கொள்ளைகள் அதிகமாகின்றன, சுங்கக்கட்டண கொள்ளையும் அதிகரிக்கிறது...இப்படி நகருக்கு நகர் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் எதையும் கட்சிகள் தொடவில்லை, வெறும் இலவசங்கள் மட்டுமே, இலவசங்கள் சிறந்த ஆட்சிக்கு தீர்வல்ல! 


#தேர்தல்

அமுதா



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,