ஞாயிறு திரை மலர்,21.03.2021

 

ஞாயிறு திரை மலர்,21.3.2021











==================================================================

பிலிம் நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமா தகவல் களஞ்சியம் - மறைந்த நாளின்று





😰 அதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் நினைவஞ்சலி குறிப்புகள்
🎩1958... நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அவரது ஆபீஸ் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் மேஜையில் அந்தப் படத்தின் ஸ்டில்கள் இருப்பதைப் பார்க்கிறார் ஆனந்தன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம்.
அச்சூழலில் "ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா" என்று யதார்த்தமாகக் கேட்கிறார் ஆனந்தன்.
"பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்" என்ற பதில் வருகிறது. அடுத்த வாரமே எல்லா பத்திரிகை களிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர். அவரை பாராட்டினார். அந்தச் சம்பவம்தான் தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓ. என்ற தொழில் பிரிவு உதயமாகக் காரணம். தமிழ் சினிமாவின் முதல் பத்திரிகை தொடர்பாளரும், 'தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்' என்று போற்றப்படுபவருமான 'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தனின் மறைவு இன்றளவும் தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு.
'நாடோடி மன்னன்' தொடங்கி 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பிரஸ் ரிலேசன் பொறுப்பாளராக (பிஆர்ஓ) பணியாற்றிவர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்றிய போது, திரைப்பட ஸ்டுடியோக்களை வலம் வந்து, குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். தனது அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால் 6,000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை திரட்டியுள்ளார்.அரிய புகைப்படங்களைத் திரட்டி இவர் நடத்திய ஒரு பிரம்மாண்ட கண்காட்சி, திரையுலகில் நற்பெயரையும், பெருமையும் பெற்றுத் தந்தது. (கட்டிங் கண்ணையா)
கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு, இவர் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட ரூ.10 லட்சம் வழங்கியது. (தற்போது அது வீணாய் போய் கொண்டிருப்பது தனி சோகம்)
மேலும், அவர் எழுதிய 'சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' எனும் நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியது.
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், முந்தைய ஆண்டில் வெளியான படங்களின் விவரங்களை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டு சினிமா செய்தியாளர்களிடம் அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். (தற்போது இதே பணியை பி.ஆர்.ஓ. பெருந்துளசி பழனிவேல் என்பவர் செய்து வருகிறார்
தமிழ்த் திரைப்படத் துறை தொடர்பான வரலாற்றை அறிந்துகொள்ள முற்படுபவர்களுக்கு இவர் பதிவு செய்த ஆவணங்கள், தகவல்கள்தான் ஆதாரமாக விளங்கும் என்ற அளவுக்கு இவரது அர்ப்பணிப்பு மிக்க பணி வியக்கத்தக்கது.
அவரின் மறைவை தமிழ் சினிமா-வே என்றைக்கும் மறக்க முடியாது என்பது நிஜம்
______________________________________________________________________



தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம். மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா ஆகியவர்கள்.
19 வயதில் பாப்ஜியைத் திருமணம் செய்துகொண்டவர். அதன் பிறகு நடிகைகள் புஷ்பவல்லி, சாவித்திரி இருவருடனும் வாழ்ந்து குழந்தைகள் தந்தவர். பின்னும் ராஜஸ்ரீயோடு affair. 78 வயதில் ஜூலியானாவை மணந்து பிரிந்து இப்போது 85 வயதில் வாழ்க்கையின் சலிப்பைத் தாங்க முடியாமல் மூச்சை நிறுத்திக் கொண்டவர்.
‘ உங்கள் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதட்டுமா? ‘ என்று ஒரு சினிமா பத்திரிக்காசிரியர் ஜெமினி கணேசனிடம் கேட்டார். “நீ எதுக்குடா எழுதணும்? Even a Rickshaw Wala in the street corner knows my whole history" – ஜெமினியின் பதில் இது!
தன்னுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜெமினி. "My life is a open book. You should read it to know what not to do."
சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர் இதைக் குறிப்பிட்டு ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார். ஆனாலும் தன்னை விடச் சாதாரண நடிகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களில் கூட நடித்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவர் நடித்திருந்தார்.
-----------------------------------------------------------------------------













Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,