சீன எலக்ட்ரிக் கார்!! விலை வெறும் ரூ.3.2 லட்சம் தானாம்!

 விற்பனையில் டெஸ்லா காரையே ஊதி தள்ளிய சீன எலக்ட்ரிக் கார்!! விலை வெறும் ரூ.3.2 லட்சம் தானாம்!


உலகளவில் பிரபலமான டெஸ்லா மாடல் 3 காரையே விற்பனையில் சீனாவை சேர்ந்த சிறிய ரக எலக்ட்ரிக் கார் ஒன்று முந்தி ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்
உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார்கள் என்றாலே அதில் பெரும்பான்மையாக டெஸ்லா கார்கள் தான் முன்னிலை வகிக்கும். அவ்வாறான டெஸ்லா கார்களில் ஒன்று தான் மாடல் 3 செடான் காராகும்.


இந்த சீன் எலக்ட்ரிக் காரின் பெயர் வுலிங் ஹாங் குவாங் மினி இவி ஆகும். பெயருக்கு ஏற்றாற்போல் தோற்றத்தில் நம்மூர் மாருதி வேகன்ஆர்-ஐ போன்று சிறியது, அதேநேரம் உயரத்தை சற்று அதிகமாக கொண்டுள்ளது.

இருப்பினும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், குறிப்பாக மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையான சீனாவில் இந்த எலக்ட்ரிக் காரின் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் இதன் விலையும் வெறும் 28,800 யுவான் தான்.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.3.2 லட்சமாகும். அதுவே டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை பின்சக்கர-ட்ரைவ் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் ப்ளஸ் வேரியண்ட்டின் விலையே ரூ.27.64 லட்சமாகும்.

பேட்டரி திறன், ரேஞ்ச் மற்றும் செயல்படுதிறனில் டெஸ்லா மாடல் 3 உடன் ஒப்பிகையில் வுலிங் ஹாங் குவாங் மினி இவி கார் பின் தங்கி இருக்கலாம். ஆனால் கொடுக்கும் காசுகேற்ற வாகனமாக இந்த மினி எலக்ட்ரிக் கார், சீனா மட்டுமில்லாமல் விற்பனை செய்யப்படும் நாடுகளின் வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதுவே இந்த சீன எலக்ட்ரிக் காரை உலகளவில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் டெஸ்லா மாடல் 3-ஐ காட்டிலும் அதிக வாடிக்கையாளர்களை பெற வைத்துள்ளது. வெர்ஜ் என்ற அமெரிக்க செய்தி தளம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, கடந்த 2021 ஜனவரியில் மொத்தம் 36,000 வுல்லிங் ஹாங் குவாங் மினி இவி கார்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே மாடல் 3 எலக்ட்ரிக் செடான் காரை 21,500 யூனிட்களே டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2021 பிப்ரவரியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இந்த சீன மினி எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


டெஸ்லா மாடல் 3-இன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை வெறும் 13,700 ஆகும். 115 இன்ச் நீளம் மற்றும் 59 இன்ச்சில் அகலத்தை கொண்ட வுலிங் ஹாங் குவாங் மினி இவி காரின் உயரம் கிட்டத்தட்ட 64 இன்ச்களாகும். வெறும் 664 கிலோ எடை கொண்ட இந்த சீன காரின் வீல்பேஸ் 76.4 இன்ச் நீளத்தில் கொடுக்கப்படுகிறது

அதிகப்பட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய வுலிங் ஹாங் குவாங் மினி எலக்ட்ரிக் காரை முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 170கிமீ வரையில் இயக்கி செல்ல முடியும். அதுவே டெஸ்லா மாடல் 3-இன் ரேஞ்ச் சுமார் 402கிமீ ஆகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,