ஆலு 65

 ஆலு 65
ஆலு 65 அல்லது உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆலு 65 ரெசிபிக்கு பேபி உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

. தேவையான பொருட்கள்
: * பேபி உருளைக்கிழங்கு - 20 * மைதா - 1 டேபிள் ஸ்பூன் * சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் * அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் * காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் * இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் * கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் * மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் * பேக்கிங் சோடா - 1 சிட்டிகை * எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - தேவையான அளவு

 செய்முறை: * 
முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீர் ஊற்றி உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * விசில் போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கு ஓரளவு வெந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உருளைக்கிழங்கு வேகாமல் இருக்க வேண்டும். * பின் அதன் தோலை நீக்கிவிட்டு, இரு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு பெரிய பௌலில் உருளைக்கிழங்கைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். * பிறகு அதில் உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். * இப்போது சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஆலு 65 ரெடி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,