67-வது தேசிய திரைப்பட விருதுகள்

 


சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு


67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று  தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


  • அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் தனுஷ் 2வது முறையாக தேர்வு

  • ஆடுகளம் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது பெற்றார் நடிகர் தனுஷ்
  • தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்திற்காக விருது பெறுகிறார் தனுஷ்
  • சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


  • சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * விஸ்வாசம் படம் இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது

* பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது


* ஒத்த செருப்பு  திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,