பாகற்காய் ஃப்ரை..

 

பாகற்காய் ஃப்ரை..

சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் வறுவல்.

தேவையான பொருட்கள் :

சின்ன/பெரிய பாகற்காய் – 1 /4 கிலோ
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
தனியா பொடி – 1 தேக்கரண்டி
சீரகப்பொடி – 1 /2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – கொஞ்சம்
தயிர் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – .10
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – கொஞ்சம்

செய்முறை :

* பாகற்காயை நன்கு கழுவி விதையை எடுத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை நன்கு தட்டிகொள்ளவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய் அத்துடன், மிளகாய், தனியா, மஞ்சள், சீரகப் பொடி, தயிர், பூண்டு, உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசையவும். இதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

* பிறகு, அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் பிசறி வைத்த பாகற்காயை போடவும்.

* தீயை மிதமாக வைக்கவும். அடிக்கடி பிரட்டி விடவும். 15 நிமிடத்தில் காய் வெந்து, நல்ல கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும்.

* கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இந்த பாகற்காய் வறுவல் கசப்பாக இருக்காது. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு நல்ல துணைக் கறி ரெடி.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,