மனிதாபிமானம்

 அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ள ஒருவர் தனது கடையில் திருடிய ஒரு இளைஞனை வீடியோ ஆதாரத்துடன் பிடித்த நிலையில், அவன் அளித்த விளக்கத்தைக் கேட்டு, அவன் திருடியதை விடவும் அதிக உணவு பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளார்.

கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ஒரு ரெகுலர் வாடிக்கையாளர் கடை உரிமையாளரின் செயலைக் கண்டு நெகிழ்ந்து, தானும் அந்த இளைஞனுக்கு 10 டொலர்கள் கொடுத்ததோடு, இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பதிவிட, அந்த செய்தி வைரலாக பரவியுள்ளது.
Ohioவில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஒரு இளைஞன் சந்தேகத்துக்கிடமாக நடமாடுவதைக் கண்ட கடை ஊழியர் ஒருவர் கடை உரிமையாளருக்கு தகவலளித்ததோடு பொலிசாருக்கும் போன் செய்துள்ளார்.
CCTV கெமரா காட்சிகளிலிருந்து அந்த இளைஞன் திருடியதை உறுதி செய்துகொண்ட கடை உரிமையாளரான ஜிதேந்திர சிங், அவனை அழைத்து என்ன திருடினாய் என்று கேட்க, அவன் தன் பாக்கெட்டிலிருந்து சில மிட்டாய்களையும் சூயிங்கம்மையும் வெளியே எடுத்து வைத்திருக்கிறான்.
ஏன் திருடினாய் என்று சிங் கேட்க, அந்த இளைஞன், பசிக்கிறது, வீட்டில் என் தம்பியும் பட்டினியாக இருக்கிறான், அதற்காகத்தான் திருடினேன் என்று கூற, இது உணவில்லை, உனக்கு சாப்பாடு வேண்டுமானால் என்னிடம் கேள் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் பொலிசாருக்கு போன் செய்த கடை ஊழியரிடம், போனை கட் பண்ண சொல்லிவிட்டு, அந்த இளைஞனிடம் உனக்கு என்ன உணவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்று கூறியிருக்கிறார்.
திருட வந்த இளைஞனுக்கு சாசேஜ், பிட்ஸா உட்பட பல உணவு வகைகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் சிங்.
ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால், அந்த இளைஞனை பொலிசில் பிடித்துக் கொடுப்பதால் நன்மை எதுவும் நடக்கப்போவதில்லை.
என்னிடம் ஏராளமாக உணவு இருக்கிறது, தினமும் ஏராளமான உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறோம்.
அதுமட்டுமில்லை, அவன் சிறைக்குப் போனால், அதற்கு பிறகு நிச்சயம் வாழ்க்கையில் எந்த நல்ல காரியத்தையும் செய்யப்போவதில்லை.
அதனால்தான் பசியாக இருந்த அவனுக்கு உணவு கொடுத்து அனுப்பினேன் என்கிறார் எளிமையாக.
இணையத்தில் இருந்து எடுத்தது
May be an image of 3 people and people standing
 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,