கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.*

 பூஜை அறையில் தண்ணீரை இப்படி மட்டும் செய்தால் போதும்! எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.*☘️ஒவ்வொரு மனிதனுக்கும் குல தெய்வம் தான் முதல் கடவுளாக இருக்கும். குலத்தைக் காக்கும் கடவுளிடம் வரம் கேட்டு தான் நம் உயிரையே எமதர்மன் பீடிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. வழிவழியாக நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் வாழும் குலதெய்வம் எப்போதும் நமக்கு தீங்கு செய்வதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் குலதெய்வம் சிலசமயங்களில் கோபித்துக் கொண்டு இருக்கும். இதற்கு நாம் நம் குல தெய்வத்தை மறந்ததும் காரணமாகும். குலதெய்வத்தை மறந்தவர்கள், குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க எளிதாக இப்படி செய்யலாம்! என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.


☘️ஒரு சிலருக்கு தங்களுடைய குல தெய்வம் என்னவென்றே தெரியாமல் இருக்கும்! ஒரு சிலர் குலதெய்வத்தை வழிவழியாக வழிபட்டு வந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அதனை பின் தொடர்வதை நிறுத்தி வைப்பார்கள், வேண்டுதல்களை மறந்து போவதும் காலதாமதம் செய்வது போன்ற விஷயங்களிலும் குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு.


☘️குலதெய்வத்தின் அருள் தடைபடும் பொழுது வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். அந்த பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியாமல் திணறுவோம். தொடர்ந்து ஒரு வீட்டில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால்! அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்பது அர்த்தமாகும். குலதெய்வ அருள் இருந்தால் தொடர்ந்து ஒருவருக்கு பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. வருகின்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியம் அவர்களிடம் இருக்கும்.


☘️இது போன்ற சூழ்நிலையில் தான் குலதெய்வத்தின் அருள் ஒரு மனிதனுக்கு தேவைப்படுகிறது. குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வருபவர்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் வருவதில்லை. குல தெய்வ வழிபாடு என்பது பித்ரு வழிபாட்டிற்கு சமமாகும். நம் முன்னோர்களின் ஆசி கிடைக்க எப்படி நாம் பித்ரு தர்ப்பணம் செய்கிறோம்? அதே போன்றே குல தெய்வ வழிபாடு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் முன்னோர்கள் இவற்றை கடைப்பிடித்து தான் பல இன்னல்களை எளிதாக சமாளித்து வந்தார்கள்.


☘️இன்று இருக்கும் அவசர சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பதால் இறைவன் மீது கவனம் சிதறி விட்டது. இறைவன் பக்கம் நம் கவனம் இருப்பதற்காகவே பல்வேறு பிரச்சினைகளை இறைவன் நமக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இறை சிந்தனையுடன் நல்லதே நினைத்துக் கொண்டு இருந்தால் நல்லதே நடக்கும்.


☘️வெள்ளிக்கிழமை அல்லது வியாழன், செவ்வாய் போன்ற கிழமைகளில் பூரண சந்திரன் வரும் வேளையில், பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பூல தட்டில் பச்சரிசியை நிரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேல் செம்பு, பித்தளை அல்லது மண்ணால் செய்யப்பட்ட பானை அதாவது கலசம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பன்னீர் மற்றும் 2 ஏலக்காய்கள், ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒன்றிரண்டு துளசி இலைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பூஜைக்கு குல தெய்வத்திற்கு உரிய மந்திரத்தை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.


☘️குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கலாம். பூஜை அறையை முழுதுமாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கலசத்தை தொட்டுக் கொண்டு 108 முறை குல தெய்வ மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து முடிக்கும் வரை கையை கலசத்திலிருந்து எடுக்கக் கூடாது. 108 முறை உச்சரித்து முடித்ததும் கையை எடுத்து விட்டு மனதார உங்கள் பிரார்த்தனைகளை முன் வையுங்கள். கலசத்தில் இருக்கும் தண்ணீரின் அசைவு குலதெய்வ வரவை உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். இந்த எளிய பரிகாரத்தை செய்தால் கட்டாயம் உங்களுடைய குல தெய்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,