நானும் என் கவிதை காதலியும்/கவிதை தினம்

 நானும் என் கவிதை காதலியும்
நான் ஊதி பறக்கவிடுவேன்
அவள் தொட்டு வெடிக்க வைப்பாள்.
என் கற்பனைகளை..
கவிதையில் ஏற்றிக்கொண்டிருந்தவள்
என் கவிதையில் ஏறும்போது
எழுத்துக்களை..
தொட்டு தொட்டே பூக்க வைத்தாள்.
சொற்கள் மலர்ந்தது
வரிகள் மணம் வீசியது.
என் கவிதைகளுக்கு
ஒப்பனையை கூட்ட..
காதல் எங்களுக்குள்
இடைவெளியை குறைத்தது.
எங்கள் விழிகளின் தீவிரவாதத்தில்
இமைகள் முத்தமிட தடை போட்டது.
அலைபேசியில் அழைத்து பேசி
தூக்கத்தை தூங்க வைத்தோம்.
நாங்கள் விழித்திருந்தே
ஓர் இரவுக்குள் பல நாட்களை
வாழ்ந்து கொண்டோம்.
சோகத்தையோ விரக்தியையோ
நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வாள்.
சமூக அவலங்களை பேசும்போது
என் கோபத்திற்கு தீனியை போட
வாழ்ந்து தேய்ந்த சொற்களையே
இழுத்து வருவாள்.
வரிகளில் தொங்கியதும்..
அவை மடிந்துவிடுவதுண்டு.
உணர்ச்சிவசப்படுகிறாய்
என்று சொல்லி சொல்லியே..
என் உணர்வுகளை மட்டும்
உறவாட விடுவாள்.
அழகியலை காட்டி
பரவசப்படுத்து என்பாள்.
நவரசம் தெளிக்க
உணர்வுகள் போதாது..
உயிரை பறிக்கவா என்றே
என் விழியை உருஞ்சுவாள்.
ஊர் உறங்கும்போது
நாங்கள் உலா போவோம்.
கூடவே வரும்
நிலவும் நட்சத்திரத்தையும்
பாதி வழியிலியே தொலைத்துவிட்டு..
இரவுக்குள் ஒளிந்துகொள்வோம்.
இப்படித்தான்..
ஒரு பகல் பொழுதில்
நிலாவையும் நட்சத்திரத்தையும்
வரவழைத்து..
விசாரனை நடத்தியது சூரியன்.
சூரியனை புறக்கனித்த
எங்கள் பகல் பொழுதுகள்
எப்படி போனதென்று
எங்களுக்கு தெரியவில்லை
என்பதை அவை ஒப்புக்கொண்டது.
சூரியன் எங்களை
கோபத்தோடு பார்க்காமல்
பரிதாபமாக பார்த்தபோதுதான்
மற்றவர்களுக்கு தெரிந்தது..
நாங்கள் கனவில்
வாழ்ந்திருக்கிறோமென்று.
நான் ஊதி பறக்க விட்டதும்
அவள் தொட்டு வெடிக்க வைத்ததும்
சூரியனையா..
என்று அதிர்ச்சியாகவே கேட்கிறார்கள்
நாங்கள் சலனமின்றி
ஆமென்று சொல்லி..
கவிதைக்குள் புகுந்து கொண்டோம்.
💗💗💗💗💗💗💗💗
கவிதை தின வாழ்த்துக்கள்.

Comments

நீண்ட காலத்திற்கு பிறகு பீப்ள்ஸ் டுடையில் சந்திக்கிறோம். கற்பனை காதலியுடன் உலாவரும் கற்பனை வழக்கம்போல் அருமை. தொடர்ந்து எழுததுங்கள் தம்பி
நீண்ட காலத்திற்கு பிறகு பீப்ள்ஸ் டுடையில் சந்திக்கிறோம். கற்பனை காதலியுடன் உலாவரும் கற்பனை வழக்கம்போல் அருமை. தொடர்ந்து எழுததுங்கள் தம்பி

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,