சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்
சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்
! மார்ச் 20 – உலக சிட்டுக்குருவி தினம்!
மனிதர்களின் நீண்டகாலத் துணை சிட்டுக்குருவிகள்.
சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகள்.
சிட்டுக்குருவிகள் நம் வீடுகளில் பாதுகாப்பான இடத்தில் கூடுகட்டி வசிக்கும்.
மரத்தில் கூடு கட்டினால் அதனுடைய முட்டைகளையும், குஞ்சுகளையும் அதைவிட பெரிய பறவைகள் எடுத்து சாப்பிட்டுவிடும்.
முன்பு கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும்தான் அதிக அளவில் இருந்தன. அந்த வீடுகளில் மேற்கூரையின் கட்டைகளுக்கு இடையே குருவிகள் கூடுகட்டின.
தற்போது பெரும்பாலான வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாகிவிட்டன.
இவை சிட்டுக்குருவிகள் வாழ ஏற்றதாக இல்லை.
சிட்டுக்குருவிகள் அழிய செல்போன் கோபுரங்கள் மட்டுமே காரணம் இல்லை.
காடுகள், வயல்வெளிகள், மரங்கள், தாவரங்கள் போன்றவற்றின் அழிவுக்கும் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைவதற்கும் நிறைய தொடர்பு உண்டு.
முன்பு சாக்கு மூட்டைகளில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும்.
அவற்றை குருவிகள் கொத்தி சாப்பிடும். தற்போது தானியங்களை பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கின்றனர்.
வடகம், அரிசி என வீடுகளில் உணவுகளைக் காய வைக்கும் பழக்கம் இருந்தது. குருவிகளுக்கு அதனால் உணவு கிடைத்தது.
இப்போது நம் உணவுக் கலாசாரமும்,
வாழ்விடமும் மாறிவிட்டன. இதனால் குருவிகளுக்கு உணவும் உறைவிடமும் கிடைப்பதில்லை.
அந்தக் கால வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு பரண், மச்சு என பல மறைவிடங்கள் இருந்தன. வீட்டின் பின்புறம் தோட்டம் இருந்தது. நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை.
உணவுக்காக இவை நீண்ட தூரம் செல்லாது. கூடு கட்டும் வசதியும்,
உணவும் இருக்கும் இடங்களுக்கு அவை தேடிவரும்.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மரம், மூங்கில் அல்லது மண் கலயங்களைக் கொண்டு கூடுகளை தயார் செய்து, வீடுகளின் முன் தொங்கவிடலாம். சிறிய கலயங்களில் தண்ணீர் வைக்கலாம்.
விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் உரம்,
பூச்சி மருந்துகள் போன்றவையும் சிட்டுக்குருவியின் மறைவுக்குக் காரணமாகிவிட்டன.
சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை அதிகரிக்க, அவை வாழ்வதற்கான
சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் நாம் செய்ய வேண்டியது.
இணையத்தில் இருந்து எடுத்தது
video:ahmed ismail nainar
Comments