பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா

 பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா? கூடாதா? வீட்டில் எங்கெல்லாம் கண்ணாடி வைக்க வேண்டும் தெரியுமா? இந்த இடத்தில் தவறியும் வைத்தால் துரதிர்ஷ்டம் துரத்துமா?வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வாஸ்து உண்டு. வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட பொருட்களுக்கு அதீத சக்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பீரோ, கடிகாரம், கண்ணாடி போன்றவையும் அடங்கும். இவைகள் அமைக்கப் பட்டிருக்கும் விதம், திசை போன்றவை பல்வேறு நன்மைகளையும், தீமைகளையும் செய்ய வல்லது. அது போல் பூஜை அறையில் கண்ணாடி வைக்க வேண்டுமா? கூடாதா? என்கிற குழப்பம் இருக்கிறதா? இந்த குழப்பத்திற்கு எல்லாம் தீர்வு காண இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். ஒரு வீட்டில் கண்ணாடி எங்கெல்லாம் வைக்க வேண்டும்? எப்படி வைத்திருக்க வேண்டும்? என்கிற விதிமுறைகள் உண்டு. அதற்கேற்ப சாதகமான பலன்களும், துரதிர்ஷ்டமும், அதிர்ஷ்டமும் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு வீட்டில் கண்ணாடி கண்ட இடத்திலெல்லாம் வைக்கக் கூடாது. இவ்வாறு வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் பெருகுவதாக கூறப்படுகிறது உதாரணத்திற்கு கண்ணாடியை வரவேற்பறையில் வைக்கும் பொழுது உள்ளே வருபவர்கள் உடைய முகம் நேரடியாக தெரியும் படி வைக்க கூடாது. சிலர் திருஷ்டிக்காக வைக்கப்படும் கண்ணாடியை வரவேற்பறையில் வைக்கிறார்கள். திருஷ்டியை போக்க வைக்கப்படும் கண்ணாடியானது கட்டாயம் வரவேற்பு அறையில் வைக்கக் கூடாது. வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும். பிரதான வாசலை அதாவது மெயின் கேட்டிற்கு வெளியில் இருந்து செல்பவர்கள், உள்ளே வரும் பொழுது அவர்களுடைய முகம் அதில் தெரிய வேண்டும். அப்படியான அமைப்பை கொண்ட கண்ணாடி தான் உண்மையில் திருஷ்டியை போக்கும். வீட்டின் நிலைவாசலை தாண்டி உள்ளே வரும் பொழுது முகம் தெரியும் படியான கண்ணாடியை வைத்து இருக்க கூடாது. பூஜை அறையில் கண்ணாடியை கட்டாயம் வைக்க வேண்டும் என்பது சாஸ்திர விதியாகும். இதை பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு நம் முன்னோர்கள் செய்து வருகின்றனர். பூஜை அறையில் கண்ணாடியை வைப்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்க வல்லது. குலதெய்வம், பித்ருக்கள் போன்ற நம்முடன் இருக்கும் மறைமுக தெய்வங்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பதாக சாஸ்திரங்களில் குறிப்புகள் உள்ளன பூஜை அறையில் தண்ணீர் வைப்பதும், கண்ணாடி வைப்பதும் இதற்காக தான். தண்ணீரிலும், கண்ணாடியிலும் இவர்கள் பிரதிபலிப்பதாகவும், வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. குலதெய்வம் தெரியாதவர்கள் கண்ணாடிக்கு சந்தன பொட்டு வைத்து பூஜை செய்தாலே போதும்! உங்களுடைய குல தெய்வம் அதில் முகத்தை காண்பிக்குமாம். இதனால் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உடைந்த கண்ணாடி ஒரு போதும் வீட்டில் இருக்க கூடாது. இது கெடு பலன்களை கொடுத்துவிடும். குளியல் அறையில் முகம் மட்டும் தெரியும் படியான கண்ணாடி அமைக்கலாம். படுக்கையறையில் இடம் பெற்றிருக்கும் கண்ணாடி ஆளுயர கண்ணாடியாக இருக்கலாம் அல்லது முட்டி வரை தெரியும் கண்ணாடியாக இருக்கலாம். முகம் பார்க்கும் முகம் மட்டுமே தெரியும் கண்ணாடியாகவும் இருக்கலாம். இவற்றை தவிர்த்து வெவ்வேறு வடிவங்களில் வரும் இடுப்பு உயர கண்ணாடி, மார்பு வரை தெரியும் படியான கண்ணாடிகளை மாட்டி வைப்பது துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடி கட்டாயம் இரவு படுக்கும் பொழுது திரை போட்டு மூடி வைத்திருக்க வேண்டும். கணவன் மனைவி தூங்கக் கூடிய இடத்தில் கண்ணாடியை திரை போட்டு இல்லாமலிருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் புரிதல் என்பது இருக்காதாம். கருத்து வேறுபாடுகள் அதிகரித்து காணப்படுமாம். எனவே படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடியை மட்டும் எப்பொழுதும் திரை போட்டு மூடி வைத்து இருப்பது அவசியமாகும். நுழைவாயில், பூஜை அறை, படுக்கை அறை, குளியல் அறை தவிர மற்ற அறைகளில் கண்ணாடியை வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தடை செய்யும் என்பதால் அதனை தவிர்த்து விடுவது நல்லதுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,