பேனா முனை-கவிதை ( லோகநாதன்)

 பேனா முனையில் வாழ்கின்றன கலைகள்





வாள் முனையில் வீழ்கின்றன தலைகள்

பேனா முனையில் வாழ்கின்றன கலைகள்
வார்த்தைகளைப் பத்திரமாய் பதிக்க
உன்னையன்றி யார் துணை
நவீன யுகத்தில் ஆயிரம் யுக்திகள் இருந்தாலும்
உன் உதவி இன்றி முடியுமா?"
"கலைக்கு உயிர் கொடுக்கும் கருவியே!!!
பாமரனைக் கூட பட்டதாரியாக்க
நீயும் இங்கு வேண்டும்!!!
இரு விரல்களுக்கு இடையில்
நடனமிடும் தேவதையே!!!"
"உண்மை சொல்ல உன் மை வேண்டும்
ஆயிரம் கவிதைகள் உனைக்கொண்டு எழுதினேன்
ஒரு கவிதையாவது உனைப்பற்றி எழுத வேண்டாமா?"
"என் கவிதைகளை இணையம் எனும்
மேடையில் அரங்கேற்றும் முன்
உனைக் கொண்டுதானே ஒத்திகை பார்க்கிறேன்!!!"
"என் விரலிடுக்கில் தவழ்ந்து விளையாடும் பேனாவே உனக்காக!!



லோகநாதன்/கொழும்பு-ஸ்ரீலங்கா)



"

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,