ரெமிங்டன் டைப்ரைட்டர்

 ரெமிங்டன் டைப்ரைட்டர் டே!
நவீன அறிவியல் _ குறிப்பாக மின்னணுவியல் தகவல் புரட்சி யுகத்தில் அல்லவா நாம் அனைவரும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவோ புதுமைகள் புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது; பழைய பல பொருள்களும் கருவிகளும், ஒன்று காணாமல் போய்விட்டன; அல்லது அரிது ஆகி வருகின்றன!

பள்ளிகளில் கால்குலேட்டர் கருவி என்பது நாங்கள் படிக்கும்போது எங்களுக்குத் தெரியாது. அப்போதெல்லாம் வாய்ப்பாடு கட்டாயம், 1ஆவது வகுப்பிலிருந்தே துவங்கிவிடும். எதையும் மனதாலேயே பெருக்கிக் கூட்டிச் சொல்லி மூளைக்கு வேலை கொடுத்து உடனே பட் என்று சொல்லிவிட மனனப் பயிற்சி பெரிதும் பயன்பட்டது. உதாரணமாக, 16 x16 என்று ஆசிரியர் கேட்டவுடன் நாங்கள் உடனடியாக தடாலடி பதிலாக 256 என்று கூவுவோம்!

இப்போதோ அந்த வாய்ப்பாடு காணாமல் போய்விட்டதே _ வகுப்புகளில்!தேர்வில்கூட கால்குலேட்டர் அனுமதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

எனவே, வாய்ப்பாடு காணாமற் போனது மட்டுமல்ல; மூளை உழைப்பும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும்கூட குறைந்து வருகிறதே!

அதுபோலவே பல பொருள்கள் காணாமற் போய்விட்டன! 40 ஆண்டுகளுக்கு முன் எல்லோருமே தட்டச்சு _ டைப்ரைட்டர் பயிற்சி பெற விரும்புவர். அதோடு சிலர் சுருக்கெழுத்தும் (Short Hand) இணைத்துக் கற்றுக்கொள்வர். எங்கும் பள்ளி இறுதி வகுப்பு முடித்தநிலையில், வீட்டில் சும்மா இராது _ அப்போது தொலைக்காட்சி _ (டி.வி) செல்போன் என்ற கைத்தொலைபேசி ஆகியவைகள் இல்லை _ நேரம் செல்ல நல்ல பயிற்சி (டைப்ரைட்டிங்) தட்டச்சுப் பயிற்சி.

இப்போதுகூட கணினிப் (கம்ப்யூட்டர்) பயிற்சியின் முதல் துவக்கம் டைப்ரைட்டிங் கீ போர்டில் விரல்களை இயக்கிடும் பயிற்சிதானே, என்றாலும் டைப்ரைட்டர்கள் காணாமல் போய்விட்டன.

இதன் சுருக்கமான வரலாறு இதோ: தெரிந்து கொள்ளுங்கள்.

கூடன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரம்தான் தட்டச்சு கண்டுபிடிக்க மூல ஆதாரமாக அமைந்தது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர் தட்டச்சு இயந்திரம் போன்ற ஒரு சாதனத்தை 1714ஆம் ஆண்டில் வடிவமைத்தார். ஆனால், அதனை மேம்படுத்த முயற்சி செய்யவில்லை.

1829இல் வில்லியம் பர்ட் என்பவர் ஒரு கருவியினை வடிவமைத்து டைபோகிராபர் (Typographer) என்று பெயர் கொடுத்தார்.

உபயோகப்படுத்திப் பார்த்தபோது பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதால் அப்படியே விட்டுவிட்டார்.

பின்னர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் 1867இல் வெற்றிகரமாக வடிவமைத்து காப்புரிமையும் பெற்றார். தான் பெற்ற காப்புரிமையை நியூயார்க் நகரின் புகழ் பெற்ற நிறுவனமான ரெமிங்டன் அண்ட் சன்ஸ்க்கு வழங்கினார். அப்படி ரெமிங்டன் டைப்ரைட்டர் காப்பிரைட்ஸை வாங்கிய நாளின்று என்பதால் தட்டச்சுக்கே இன்னிக்கு ஹேப்பி பர்த் டே -ன்னு சிலர் குறிப்பிடறாங்க

அந்த ஷோல்ஸ் வடிவமைத்த இயந்திரத்தில் அனைத்து எழுத்துகளும் பெரிய எழுத்துகளாக (Capital Letters) இருந்தன. இந்தக் குறையானது 1878இல் ரெமிங்டன் நிறுவனத்தால் சரிசெய்யப்பட்டதுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,