குறையை தவிர்த்து கூடியிருந்தால் வாழ்தல் இனிது.

 கோபங்கள், துவேசங்களோட எத்தனை நாட்கள் தான் வாழுவோம்?

வாலிபத்தின் குருதி சூடு வயதானதும் அடங்க வேண்டும் அதன் பெயர் பக்குவம் இல்லையென்றால் அதுக்கு பேரு ரத்தக்கொதிப்பு.














எத்தனை நாட்களுக்கு தான் சகிப்புதன்மையோட வாழுறது? புழு கூட சீண்டினால் பாம்பு மாதிரி ஒரு செகண்ட் படம் எடுக்கும். பிரியம் வச்சுட்டோம்னு எல்லாத்தையும் சகிக்கனும் என்பது விதியில்லை. வெளிக்காட்டாத அன்பு நாளடைவில் ஒட்டுதல் இன்மையை உருவாக்கிவிடும். உணர்வுகளை வெளிப்படுத்த கத்துக்கனும். எத்தனையோ கடினமான வேலைகளையும் கம்பியூட்டர் லாங்குவேஜ்களையும் கத்தும் போது உணர்வுகளை வெளிப்படுத்த கொஞ்சம் மெனெங்கெட்டால் என்ன? சமயசந்தர்ப்பம் பார்த்து வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது உள்ளொன்று வைத்து புறம் சிரிப்பதை விட. அப்படி மறைத்து பேசி உறவாடுவதை விட உடைத்து கேட்டு அதனால் விலகல் வந்தாலும் அவ்வளவாக பாரம் இருக்காது மனதுக்கு. கொதித்துக்கொண்டே இருப்பதை விட குமிறி விடுவது நல்லது. அன்றைக்கு பார்த்தார்போல் இன்றும் இருக்கிறாய் என்னும் பதத்துக்கு பல பொருள் உண்டு. அதை சொல்பவரின் தொனியும் கேட்பவரின் நிலையுமே தீர்மானிக்கிறது. அன்று இருந்ததை போலவே இன்றும் இருப்பது என்பது மனித வாழ்க்கையில் தேக்கநிலை என எடுத்துக்கொள்ள வேண்டும் மாற்றம் ஒன்று தான் நமது வளர்ச்சி சொல்லும். மறதி மனுச வாழ்க்கைக்கு வரமாக வந்த சாபம். சிலதை மறந்துவிடலாம் , சிலது சிலருக்கு மறந்தும் போகலாம் எதை மறக்கனும் எதை நினைவுல வைக்கனும்னு முடிவு செய்யறது நாம தான். என்றைக்கோ நடந்ததை வன்மாக மனதில் வைத்து மருகுவதை விட மறந்துவிட்டேன் என்றோ நினைவில் இல்லை என்பதோ நல்ல ஆசுவாசத்தை கொடுக்கும். நடந்ததையே சொல்லி கீறல் விழுந்த ரெகார்டாக இருப்பதை விட ரெகார்ட் பிரேக் நல்லது தானே? கோபதாபங்கள், விருப்பு வெறுப்புகள் நிறைந்தது தான் வாழ்க்கை அதற்காக ஒரே அடியாக முறுக்கிக்கொண்டே இருப்பதினால் என்ன பயனை அடைந்துவிட்டோம்? கொஞ்சம் வாழ்க்கையை ரசித்து வாழ்வோமே. இதே போல ஒரு வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள் ஒரு முறை கடந்து வந்துவிட்டால் திரும்ப அதே போன்ற நிலையில் அமையாது திரும்ப கிடைத்தாலும். அப்போது இருந்த நிலையை விட கூட குறைய தான் கிடைக்கும்.
குறையை தவிர்த்து கூடியிருந்தால் வாழ்தல் இனிது.



சாந்தி ராஜ்
 நியூசவுத்வேல்ஸ்( ஆஸ்திரேலியா)


















Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,