நாம் நாமாக இருப்போம்




               நம்மை பத்தி நமக்கு தான் மற்றவர்களை விட நன்றாக தெரியும் ஆனா பெரும்பாலும் மற்றவர்கள் நம்மை பத்தி எப்படி நினைப்பாங்களோனு யோசிக்கிறதுலையே கழிந்து போகிறது. மற்றவர்கள் நம்னைவிட புத்திசாலிகள்னு நாமே முடிவெடுத்துவிடுகிறோம். நம்முடைய இயல்பை விட்டு அடுத்தவர்களுக்காக வாழ்வதிலேயே வாழ்க்கையின் முக்கால் பாகம் வீணாக போகிறது.

ஒருவரை நமக்கு பிடித்து இருக்கிறது என்பதற்காக நமது இயல்பை தொலைத்து இணைந்து இருக்க முற்பட்டால் நாளடைவில் சலிப்பே மிஞ்சும். ஒருவருக்கு ஒருவர் இயல்பறிந்து இணையும் உறவே நிலைக்கும். இதில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது உறவை நிலைப்படுத்தும் தான் ஆனால்
இனிமையாக
்காது. வாழ்நாள் முழுவதும் காம்பரமைஸில் கழிக்க வேண்டிய எந்திர வாழ்க்கையாக இருக்கும். எதோ ஒன்றுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளலாம் என்பது வேலைக்கு ஆகாது. நமக்கு பிடித்தவர்களுக்காக
போலியாய் வாழ முயற்சிக்க வேண்டாம்.
நிம்மதியா வாழ்க்கை போகனும்னா நம்ம இயல்புக்கு, ரசனைக்கு ஏற்ற வாழ்க்கையை தேர்ந்து எடுக்கனும். நமக்கு பிடிச்ச, நம்ம உடலுக்கு ஏற்ற உணவு சாப்பிட்டா தான் அது நல்லதா இருக்கும் ஆசைக்கு ஒரு நாள் ரெண்டு நாள் அடுத்தவங்க டேஸ்ட்டுக்கு சாப்பிடலாம் ஆனா அதான் வாழ்க்கை முழுவதும்னா நாக்கு செத்துடும். அது போல தான் இயல்பை தொலைத்து வாழும் வாழ்க்கை.
தொலைத்தால் திரும்ப கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அது முன் போல இருக்காது... இயல்பு...!!! ஒன்றை இழந்தால் தான் மற்றது கிடைக்கும் என்பது உண்மை அதற்காக தன்மானத்தை இழந்து விட கூடாது. நாம் நாமாக இருப்போம். நமக்கானது நம்மை வந்து அடையும் .போவதை நிறுத்தியோ, போகாம இருக்க நம்மை பொருத்தவோ செய்தால் வாழ்க்கை போகும் ஆனால் உயிர்ப்பு இல்லாமல்...!!!






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,