இட்லிதினம் ஸ்பெஷல் ரவா இட்லி

 இன்று உலக இட்லி தினம்

இட்லிதினம் ஸ்பெஷல்








ரவா இட்லி😋 தேவையானவை ரவை – 1 கப் எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன் கடுகு – சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலை பருப்பு – 1 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – சிறிதளவு வெங்காயம் – 1/2 கப் தயிர் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை:- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு அதனுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிது நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை எடுத்து பொடியாக நறுக்கி அதனுடன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தினை கொட்டி கிளறி மேலும் அதனுடன் ரவை கொட்டி மிதமான சூட்டில் நன்றாக 5 நிமிடம் வரை வறுக்கவும். அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்து கொள்ளுங்கள். ரவை ஆறியதும் அதனுடன் கெட்டியான தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும். பிறகு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதில் உப்பு, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு ஊறிய ரவையினை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி 10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,