சுவையான ரசம்

 

சுவையான ரசம் செய்ய இனி ரசப்பொடி இல்லாமல்




தென்னிந்திய உணவு வகைகளில் ரசத்திற்குத் தனி இடம் உண்டு. தக்காளி, புலி, எலுமிச்சை, கொள்ளு, பருப்பு என வீட்டிலிருக்கும் எந்த எளிமையான பொருளைக்கொண்டும் ரசம் செய்ய முடியும். இனி அதுபோல் வித்தியாச ரசம் வைப்பதற்கு ரசப்பொடி தேவையில்லை. ரசப்பொடி இல்லாமல் பத்தே நிமிடத்தில் சுவையான ரசம் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு – 4
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
நறுக்கிய தக்காளி – 1 1/2 கப்
மஞ்சத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்
புளி – சிறிதளவு
கொத்தமல்லி – 1 கைப்பிடி

செய்முறை

ஓர் வாணலியில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் ஒன்றைச் சேர்த்து வறுக்கவும். வெந்தயம் நிறம் மாறுவதற்கு முன் 1 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு வறுத்துக் குளிரவைக்கவும்.

பிறகு, இந்தக் கலவையை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

சூடான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் ஒரு உடைத்த காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் கடுகு சேர்க்கவும்.

பிறகு, அதில் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

ஒரு நிமிட இடைவெளியில், தக்காளி, மஞ்சத்தூள் மற்றும் உப்புச் சேர்த்துக்கொள்ளவும்.

தக்காளி நன்கு வதங்கி  விடும் நேரத்தில், அரைத்து வைத்த பொடியைச் சேர்க்கவும்.

2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு கலந்துவிட்டு, பிறகு தண்ணீர் மற்றும் புளியைச் சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்கு கலந்துவிட்டு, கொதி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி சுடச்சுடப் பரிமாறலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,