வித்தியாச சுவையில் தேங்காய் சட்னி

 

வித்தியாச சுவையில் தேங்காய் சட்னி





தேங்காய் சட்டினிக்குக் கூடுதல் டேஸ்ட் கொடுக்கும் ஃபிரெஷ் கொத்தமல்லியைச் சேர்த்துப்பாருங்கள், நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும். பயன்படுத்தப்படும் புதிய கொத்தமல்லி இலைகளிலிருந்து தனித்துவமான சுவையைப் பெறுவதால் பெரும்பாலான மக்கள் இதனை நிச்சயம் விரும்புவார்கள்.

தேவையான பொருள்கள்

துருவிய தேங்காய் – 1/2 கப்
ஃபிரெஷ் கொத்தமல்லி – 1/4 கப்
வறுத்த கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – 1/4 இன்ச்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2 (காரத்திற்கேற்ப)
உப்பு, புளி – தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உடைத்த சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 சிறுகிளை
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை

மிதமான தீயில் கடலைப்பருப்பை நிறம் லேசாக மாறும் வரை வறுத்து, அதனோடு சீரகம் சேர்த்ததும், அடுப்பை அணைக்கவும்.

பருப்பு ஆறியபிறகு தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, புளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தாளிப்பு பொருள்களைக் கொண்டு தாளித்து, அரைத்த சட்னியோடு சேர்த்து சூடான இட்லி, தோசையோடு இந்த சுவையான கொத்தமல்லி தேங்காய் சட்னியைப் பரிமாறலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,