சங்க இலக்கியத்தில் காதல்/குறுந்தொகை

 சங்க இலக்கியத்தில் காதல்





குறுந்தொகை பாடல் ஒன்று இன்று
மனப்போராட்டத்தை நீக்கும் உளவியல்மருத்துவராக நண்பரையும் தோழியையும்குறுந்தொகை காட்டுகிறது.
தாய் முதலியவர்களால் காக்கப்படுகிறாள்தலைவி, தலைவனைப் பிரிந்த சோகம் தாங்கமுடியாமல் தோழியிடம் மனம் வெதும்புகிறாள்.
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகுகதில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே“
எனும் சிறைக்குடி ஆந்தையாரின் தோழி –தலைவியின் நெருக்கமான நட்பைவெளிப்படுத்துகிறது.
நீரிலே சோடியாக மகன்றில் பறவைபயணிக்கிறது. இடையில் சிறு பூ இடைப்படுகிறது. அந்த ஒரு வினாடிப் பிரிவு தாங்க முடியாமல் உடன்உயிர் போய்விட்டது என்று அஃறிணைப்பொருட்களைக் கொண்டு தோழியிடம் தலைவிஆறுதல் அடைகிறாள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி