ஐடி துறையில் மிக வேகமாக பரவிக் கொண்டு வரும் பிளெக்ஸி கலாச்சாரம்

 ஐடி துறையில் மிக வேகமாக பரவிக் கொண்டு வரும் பிளெக்ஸி கலாச்சாரம், நிரந்தர ஊழியர்களுக்கு பிரச்சனையா? எப்படி? முதலில் இந்த பிளெக்ஸி ஸ்டாஃபிங் என்றால் என்ன?

பிளெக்ஸி பணியமர்த்தல் என்பது ஒப்பந்த ஊழியர்கள் என்று கூட கூறலாம்.

தற்போது ஐடி நிறுவனங்கள் பெரும் அளவிலான ஊழியர்களை இந்த பிளெக்ஸி முறையில் பணியமர்த்தி வருகின்றன. இது குறுகிய கால திட்டங்களுக்காக, டிஜிட்டல் திறன்களைக் கொண்டவர்களின் பணியமர்த்தி வருகின்றன.


அதிகரித்து வரும் பிளெக்ஸி பணியமர்த்தல் தற்போது டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் தொற்று நோய் காலத்தில் மாற்றம் கண்டது. இந்த நெகிழ்வான பணியமர்த்தல் என்பது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22% அதிகரித்துள்ளது.

ஐடி நிறுவனங்கள் தங்களது தேவை அதிகரிப்புக்கு மத்தியில், இந்த பிளெக்ஸி பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் முழு நேர ஊழியர்களாக கொண்ட ஒரு பணியாளர் குழுவை கொண்டிருக்க விரும்புகிறார்கள். ஆனால் நிறுவனங்களோ தங்களது தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். பயன்படுத்தியும் வருகின்றனர்

கடந்த 2018ல் 3.3 மில்லியனாக இருந்த பிளெக்ஸி ஊழியர்களின் எண்ணிக்கையானது, இந்த ஆண்டில் 6.1 மில்லியனாக அதிகரிக்கும் என்றும், இது கிட்டதட்ட 23% வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது. இந்த பிளெக்ஸி பணியமர்த்தலானது ஊழியர்களுக்கு தேவைப்படும்போது நிறுவனங்கள் பணியமர்த்திக் கொள்கின்றன. அவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் தேவைக்கேற்ப பணிமயர்த்துகின்றன.

சமீப ஆண்டுகளாகவே இந்த பிளெக்ஸி கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. இது கார்ப்பரேட்டுகள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றது. குறிப்பாக ஐடி துறை மற்றும் ஐடி துறை சார்ந்த துறைகளிலும் இந்த கலாச்சாரம் பரவி வருகின்றது. இது பெரியளவில் பரவ சில காரணங்களும் உண்டு என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஐடி துறையில் பரவி வரும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு மத்தியில், நல்ல திறனுள்ள ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஆக இவ்வாறு பிளெக்ஸி முறையில் பணிபுரியும் ஊழியர்களில், திறனுள்ளவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றிக் கொள்ளும் நிறுவனங்கள், மற்றவர்களை விரும்புவதில்லை.
இதனால் தான் தேவைப்படும்போது எடுத்துக் கொண்டு, வேண்டாம் எனும் போது விட்டுவிடுகின்றன. இதற்கு வேற தீர்வே இல்லையா என்றால் நிச்சயம் உண்டு. இன்றளவிலும் பல லட்சம் ஊழியர்கள் வேலையில்லாமல் இருந்தாலும், ஐடி துறையில் பல துறைகளுக்கு ஆட்கள் என்பது பற்றாக்குறையாகவே உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் திறன், டேட்டா, கிளவுட் சேவை என பல துறைகளிலும் திறன் மிகுந்த ஊழியர்களுக்கு டிமாண்ட் உள்ளது. ஆனால் ஊழியர்கள் இல்லை. அதாவது இத்துறை சார்ந்த திறன் இல்லை. ஆக ஊழியர்கள் நிலவரத்திற்கு ஏற்ப தங்களது திறனையும் வளர்த்துக் கொள்வதே இதற்கு சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்கா நிறுவனம் கருத்து 

அமெரிக்காவினை அடிப்படையாகக் கொண்ட UST Global என்ற நிறுவனம், ஐடி துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஊழியார்களில் கிட்டதட்ட பாதிபேர் இந்தியர்கள் தான். இந்த நிறுவனம் பிளெக்ஸி முறையை பயன்படுத்தி, மிக வேகமாக தங்களது திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு முடித்துக் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஊழியர் தொகுப்பில் 15 - 20% பிளெக்ஸி ஊழியர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் இதனால் நிறுவனங்கள் பெஞ்ச் ஊழியர்களை குறைத்து வருகின்றன. ஆக இதனை தவிர்க்க ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு நிறுவனங்களுக்கும் இந்த பிளெக்ஸி முறையில் பணியமர்த்தும்போது செலவினை குறைக்க முடியும் என்பதால் இதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் உங்களது திறன் நிறுவனத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் உங்களை நிறுவனங்கள் நிரந்தரமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றன.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,