ருடால்ஃப் டீசல்

 

டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல்
பிறந்த தினம் இன்று.
\
👉 ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) 1858ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
👉 இவருடைய உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில் சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.
👉 இவர் இன்ஜின்கள் குறித்தும் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை நான்கு மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.
👉 நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்து இறுதியில் அதற்கு பதிலாக "கம்ப்ரெஷன் இக்னிஷன்" இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே இவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது.
👉 உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கி தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய இவர் தனது 55வது வயதில் (1913) மறைந்தார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,